எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 18 August 2021

படித்ததில் பிடித்தவை (“வேறென்ன வேண்டும்?” – அ.வெண்ணிலா கவிதை)

 


*வேறென்ன வேண்டும்?*

 

இப்போதும் சூரியன்

தவறாமல்

உதிக்கிறான்.

 

பூக்கள் செடியில்

மலர்கின்றன.

 

சுவாசிக்கக்

காற்று இருக்கிறது.

 

என் மனம்

அன்பென்ற

மந்திரத்தைச்

ஜெபிக்கின்றது.

 

இதை விட

வேறென்ன வேண்டும்

கவிதை எழுத..?

 

*அ.வெண்ணிலா*





1 comment:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    அ. வெண்ணிலா
    (1971 ஆகஸ்ட் 10)
    தமிழ் இலக்கியத்தில்
    பதினைந்து ஆண்டுகளாக
    தீவிரமாக இயங்கி வரும்
    எழுத்தாளராவார்.
    திருவண்ணாமலை மாவட்டம்
    வந்தவாசியில் இருக்கும்
    அம்மையப்பட்டு கிராமத்தில்
    வாழ்கிறார்.
    தான் படித்த வந்தவாசி
    அரசு பெண்கள் மேனிலைப்
    பள்ளியிலேயே கணிதப்
    பட்டதாரி ஆசிரியராக
    பணியாற்றி வருகிறார்.
    கணிதப் பாடத்தில் இளநிலை
    பட்டம் பெற்ற இவர் பின்னர்
    உளவியலில் முதுநிலை,
    வணிகவியலில் முதுநிலை
    பட்டங்களை பெற்றதோடு
    தொடர்ந்து கல்வியியலில்
    முனைவர் பட்டத்தையும்
    பெற்றுள்ளார்.

    இவரது கணவர் மு.முருகேசும்
    தமிழ் இலக்கிய உலகின்
    கவனத்தை ஈர்த்து இயங்கிவரும்
    முக்கியமான கவிஞராக
    அறியப்படுகிறார்.

    பிள்ளைகள் : கவின்மொழி,
    நிலாபாரதி, அன்புபாரதி.

    அ. வெண்ணிலா அவர்கள்
    கவிஞர், சிறுகதை ஆசிரியர்,
    கட்டுரையாளர், நாவலாசிரியர்,
    ஆசிரியர், சிறு பத்திரிகை
    ஆசிரியர் என பன்முக
    ஈடுபாடுகளுடன் தமிழ் உலகில்
    இயங்கிவருகிறார்.
    பெண்ணியம் சார்ந்த
    கருத்துகளை முன்னெடுத்து
    இலக்கியம் படைத்து வருவது
    வெண்ணிலாவின்
    தனித்துவமாகும்.
    அன்றாட வாழ்வின்
    இன்னல்களை புனைவுகள்
    ஏதுமின்றி படைப்பாக்குவது
    இவரது ஆற்றலாகும்.
    இவர் எழுதிய படைப்புகள்
    ஆங்கிலம், மலையாளம், இந்தி
    என பல மொழிகளில்
    மொழிபெயர்ப்பாகி
    பலராலும் பாராட்டப்பட்டுள்ளன.
    நூல்கள் பல்வேறு
    பல்கலைக்கழகங்கள் மற்றும்
    கல்லூரி அளவிலான
    பாடத்திட்டங்களில் பாடமாகவும்
    இடம்பெற்றுள்ளன.
    2009-2010 ஆம் ஆண்டு காலத்தில்
    தமிழகத்தின் சமச்சீர் கல்வி
    பாடத்திட்டக் குழுவில்
    ஒருங்கிணைப்பாளராக
    பணியாற்றி புதிய பாடப்புத்தக
    உருவாக்கத்தில் பெரும்
    பங்களிப்பை வழங்கியுள்ளார்
    என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

    ReplyDelete