எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 20 March 2022

*ஒற்றை வாழைப்பழம்*

 


சூப்பர் மார்க்கெட்டில்

வாங்கிய வாழைப்பழ சீப்பில்

வெட்டுப்பட்ட கடைசிப்பழத்தை

நீக்கியப் பிறகுதான்

எடைப்போட்டு வாங்கினேன்.

 

வீட்டுக்கு வந்தபின்தான்

மனது உறுத்திக்கொண்டேயிருக்கிறது...

அந்த ஒற்றைப் பழத்தை

யாருமே வாங்க மாட்டார்களே...

நானே வாங்கியிருக்கலாம் என்று..!

 

 *கி.அற்புதராஜு*

11 comments:

  1. ஜெயராமன்20 March 2022 at 07:42

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  2. வெங்கட்ராமன், ஆம்பூர்20 March 2022 at 07:43

    கவிதை மிக அருமை.
    வாழ்த்துகளும்,
    நன்றியும்..!

    ReplyDelete
  3. மகிழ்ச்சி.
    கவிதை அருமை.

    ReplyDelete
  4. சத்தியன்20 March 2022 at 07:45

    பாராட்டுகள்.
    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  5. செல்லதுரை20 March 2022 at 10:01

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  6. மோகன்தாஸ். S20 March 2022 at 10:03

    அது சூப்பர் மார்க்கெட்,
    வீனானால் நஷ்டமில்லை.

    இதுவே தெருவோர
    வியாபாரியாய் இருந்தால்,
    இந்த கவிதை பொருந்தும்.

    ReplyDelete
  7. சீனிவாசன்20 March 2022 at 14:43

    உண்மையான மகிழ்ச்சி
    மற்றும் நேர்மறை உணர்வுகளை
    வெளிப்படுத்துகிறது.

    ReplyDelete
  8. அம்மையப்பன்20 March 2022 at 16:50

    புன்னகை.

    ReplyDelete
  9. பிருந்தா20 March 2022 at 21:33

    கவிதை மனதை தொட்டது.
    அட நமக்கு தோன்றவில்லையே?
    என வருத்தப்பட வைத்தது.

    தெருவில் வண்டியில்
    வாழைப்பழம் விற்பவர்
    வெட்டுப்பட்ட மற்றும்
    சிறிய பழங்களை
    நாம் வாங்கும் பழங்களுடன்
    இலவசமாக கொடுப்பார்.

    சூப்பர் மார்க்கட்டில்
    இதுப்போல ஒதுக்கப்படும்
    பழங்களைப் பெரும்பாலும்
    குப்பையில்தான் கொட்டுவார்கள்.


    Positive vibes.
    Super.

    ReplyDelete
  10. ஸ்ரீகாந்தன்20 March 2022 at 22:06

    கவிதை அருமை.

    ReplyDelete
  11. ஸ்ரீராம்21 March 2022 at 10:30

    கவலை படாதீர்கள் நண்பரே!
    அதை உண்ண பசுக்கள்
    காத்திருக்கின்றன!

    இறைவன் படைப்பில்
    எதுவுமே வீணாவதில்லை!

    ReplyDelete