எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 1 March 2022

படித்ததில் பிடித்தவை (“முதல் காயம்” – இசை கவிதை)

 


*முதல் காயம்*

 

சைக்கிள் சறுக்கி

தரையில் விழுந்து விட்டாள்

சின்னஞ்சிறுமி.

 

முதல் காயம்.

முதல் குருதி.

 

வீறிட்டு

வீறிட்டுக் கதறுகிறாள்.

 

மருத்துவத்திற்கு

ஒத்துழைக்க வைக்க

மூன்றுபேர் சேர்ந்து

போராட வேண்டியிருந்தது.

 

காயத்தைத் துடைத்து

மருந்திட்டுக் கட்டினேன்.

 

அழுகை தேய்ந்து

முனகலானபோது

கட்டுத் துணியைப் பார்த்து

ஏனோ

கொக்கு போல் இருக்கு

என்றாள்.

 

அப்போதே

அந்தக் காயம் எழுந்து

பறந்துபோவதைக் கண்டேன்..!

 

*இசை () ஆ.சத்தியமூர்த்தி*

{‘உடைந்து எழும் நறுமணம்கவிதை நூலிலிருந்து.}



8 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *இசை*
    இயற்பெயர் சத்தியமூர்த்தி.
    பிறப்பு : 1977.
    பொது சுகாதாரத் துறையில்
    பணி.
    வசிப்பது கோவை மாவட்டம்
    இருகூர்.

    வெளிவந்திருக்கும் நூல்கள் :

    1. காற்று கோதும்
    வண்ணத்துப்பூச்சி (கவிதைகள்)
    2. உறுமீன்களற்ற நதி
    (கவிதைகள்)
    3. சிவாஜிகணேசனின்
    முத்தங்கள் (கவிதைகள்)
    4. அதனினும் இனிது அறிவனர்
    சேர்தல் (கட்டுரைகள்)
    5. அந்தக் காலம் மலையேறிப்
    போனது (கவிதைகள்)
    6. லைட்டா பொறாமைப்படும்
    கலைஞன் (கட்டுரைகள்)
    7. ஆட்டுதி அமுதே (கவிதைகள்)
    8. உய்யடா உய்யடா உய்
    (கட்டுரைகள்)
    9. பழைய யானைக் கடை
    (கட்டுரைகள்)
    10. வாழ்க்கைக்கு வெளியே
    பேசுதல் (கவிதைகள்)
    11. நாயகன் வில்லன் மற்றும்
    குணச்சித்திரன் (கவிதைகள்)
    12. தேனோடு மீன் (கட்டுரைகள்)
    13. மாலை மலரும் நோய்
    (கட்டுரைகள்)
    14. உடைந்து எழும் நறுமணம்
    (கவிதைகள்)

    ReplyDelete
  2. சத்தியன்1 March 2022 at 14:59

    கவிதை மிக அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  3. கெங்கையா1 March 2022 at 15:00

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  4. செல்லதுரை1 March 2022 at 15:01

    கவிதை அருமை.

    ReplyDelete
  5. ஸ்ரீராம்1 March 2022 at 15:02

    மிக அருமை. ‌
    எந்த சூழலில் இருந்தும்
    சுலபமாய் விடுபடுவது
    இறைவன் குழந்தைகளுக்கு
    அருளிய வரம்.

    ReplyDelete
  6. Dr. Balamurali7 March 2022 at 18:25

    குழந்தை மனம்.
    கவிதை மிக மிக அருமை.

    ReplyDelete