எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 20 June 2021

படித்ததில் பிடித்தவை (“மதிப்பீடு” – நா.கோகிலன் கவிதை)

 


*மதிப்பீடு*

 

சட்டை கேட்டால்

நூறு ரூபாயில் காட்டட்டுமா?’

என்கிறார் துணிக்கடைக்காரர்.

 

உள்நுழையும்போதே

ஐம்பது ரூபாய் ரப்பர் செருப்பை

எடுத்து நீட்டுகிறார் செருப்புக்கடைக்காரர்.

 

மெனு கார்டுக்குள் நுழையவிடாமல்

பரோட்டாவா?’ என்கிறார்

ஹோட்டல்காரர்.

 

உரிய ஸீட்டோடு ரயிலேறுகையில்

இது முன்பதிவு செய்த பெட்டி

என்கிறார் பயணச்சீட்டுப் பரிசோதகர்.

 

அந்த மணியை அடிக்கக்

கொஞ்சம் தூக்குங்க அங்கிள்

என்னும் அச்சிறுமி

என்மீதான அத்தனை மதிப்பீடுகளையும்

உடைத்து உயர்த்துகிறாள் என்னை..!

 

*நா.கோகிலன்*

9 comments:

  1. சீனிவாசன்20 June 2021 at 07:52

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  2. கெங்கையா20 June 2021 at 09:27

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  3. மிக்க நன்றி

    ReplyDelete
  4. ஸ்ரீராம்20 June 2021 at 13:20

    உலகமாயமாதலின்
    தவிர்க்க முடியாத
    தன்மை "மதிப்பீடு"

    ReplyDelete
  5. செல்லதுரை20 June 2021 at 21:12

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete