எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 16 June 2021

படித்ததில் பிடித்தவை (“உன் ஒற்றைச்சொல்” – க.பிரபு சங்கர் கவிதை)


*உன் ஒற்றைச்சொல்*

 

ஒரு சிறு சண்டைக்கு

பிறகான கட்டாய

இருச்சக்கர பயணம்...

 

இருபக்கம் கால்கள்

போட்டமரும் வழக்கம் மாறி

ஒரு பக்கமாய் அமர்கிறாய்...

 

வழக்கமான தோள் பிடியின்றி

கம்பிகளை கெட்டியாய்

பிடித்துக் கொள்கிறாய்...

 

இருவருக்குமிடையேயான

இருக்கையின் இடைவெளியில்

ஒரு சிட்டுக்குருவி பறந்து போகிறது...

 

பக்கவாட்டு கண்ணாடியை உன்

முகம் பார்க்க திருப்பினால்

அதைப்பார்த்து நீ திரும்பி

கொள்கிறாய்...

 

வாகன இரைச்சல்கள் மத்தியில்

உன் மெளனங்களை உற்று

கேட்டுக்கொண்டிருக்கிறது

என் காதுகள்...

 

திடீரென குறுக்கே ஓடிவரும்

நாயை கண்டு அனிச்சையாய்

பார்த்துங்க என்ற உன் ஒற்றைச்சொல்

உடைத்தெறிந்து விடுகிறது

மொத்த ஊடலையும்...

 

மெல்ல மீண்டெழுகிறது

மொத்த நேசங்களும்..!

 

*க.பிரபு சங்கர்*


6 comments:

  1. ஹரிகுமார்16 June 2021 at 07:43

    அருமை.

    ReplyDelete
  2. அருமை அனைவருக்கும் இருக்கும் இந்த அனுபவம்.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்16 June 2021 at 09:13

    கணவன் மனைவிக்கிடையேயான ஊடலையும்,எந்த நிலையிலும்
    மாறாத மனைவியின்
    நேசத்தையும் மிக அழகாக
    இழைத்திருக்கிறார்
    கவிதையில் கவிஞர்.
    மிக அருமை.

    ReplyDelete
  4. சத்தியன்16 June 2021 at 09:16

    கவிதை அருமை.
    கவிஞரைப் பாராட்ட
    வார்த்தைகள் இல்லை.

    ReplyDelete
  5. கெங்கையா16 June 2021 at 11:20

    கவிதை அருமை.
    உண்மை.
    அனைவரின் அனுபவம்.
    கவிஞருக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete