எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 18 December 2021

படித்ததில் பிடித்தவை (“இடுப்பிலிருக்கும் குழந்தை” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*இடுப்பிலிருக்கும் குழந்தை*

 

முண்டியத்து

முன்னேறி

இடம் பிடித்து

அமர்ந்து

வெற்றி பெருமூச்சு விட்டு

பின் பார்க்க

ஏற முடியாமல்

திணறி

வெளியேறி

வெயில் கவ்வ

தள்ளி நிற்கும் தாயின்

இடுப்பிலிருக்கும் குழந்தை

சிரித்தபடியே

கையசைத்துக் கொண்டிருந்தது

என்னைப் பார்த்து..!

 

*ராஜா சந்திரசேகர்*



2 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. ஸ்ரீராம்18 December 2021 at 18:42

    போட்டி மனப்பான்மையுடைய
    சமூகத்தில் வலியது மட்டுமே
    வெல்லும் என்பதை நயமாக
    கூறும் கவிதை.

    ReplyDelete