எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 9 December 2021

படித்ததில் பிடித்தவை (“மான்யா” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*மான்யா*

 

காலையை அழகுபடுத்தி

சென்றுகொண்டிருந்தன

பள்ளிக்குழந்தைகள்.

 

என்னை கவர்ந்த

ஒரு குழந்தைக்குப்

பெயரிட்டேன்

 

மான்யா.

 

பள்ளிக் கடக்கும்போதெல்லாம்

என் மான்யாவைப் பார்ப்பது

வழக்கமாயிற்று.

 

அவள் நடைஅசைவும்

கண்களிலிருந்து

கொட்டும் கனவுகளும்

சுகமானவை.

 

பள்ளிவிடுமுறை நாட்களில்

பார்க்க முடியாமல் போகும்

மான்யாவை.

 

சந்திக்க வாய்ப்புக்கிடைத்த

ஒரு தருணத்தில்

அவளிடம் கேட்டேன்.

 

உன் பெயரென்ன..?

 

சிரித்தபடி பார்த்தவள்

பேசினாள்.

 

உங்களுக்கு என்ன

பிடிச்சிருந்தா

உங்களுக்கு பிடிச்ச பேர்ல

கூப்பிடுங்க.

 

மான்யா.

 

கேட்டு

நாக்கில் சுவையூறும்படி

சொல்லிப்பார்த்தாள்.

 

பள்ளிமணி அழைக்க

கை அசைத்தபடி ஓடி

தன் தோழியோடு

சேர்ந்துகொண்டு சொன்னாள்.

 

என்னோட

இன்னோரு பேரு

மான்யா..!

 

*ராஜா சந்திரசேகர்*




8 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. ஸ்ரீராம்9 December 2021 at 09:20

    குழந்தைகளை
    பார்ப்பதும்,பேசுவதும்
    அவர்களுடைய செயல்களை
    அமைதியாக நோக்கி
    இன்புறுவதும்
    வாழ்க்கையில் இறைவன்
    நமக்களித்த வரம்.

    ReplyDelete
  3. சீனிவாசன்9 December 2021 at 10:35

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  4. சத்தியன்9 December 2021 at 10:36

    கவிஞருக்கு பாராட்டுகள்.
    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  5. நரசிம்மன் R.K9 December 2021 at 11:41

    கவிதை மிகவும் நன்று.

    ReplyDelete
  6. கெங்கையா9 December 2021 at 18:17

    கவிதை மிக அருமை.

    ReplyDelete