எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 1 December 2021

படித்ததில் பிடித்தவை (“மது” – வைரமுத்து கவிதை)

 

*மது*

 

“மது என்பது

அரசுக்கு வரவு

அருந்துவோர் செலவு.

 

மனைவிக்குச் சக்களத்தி

மானத்தின் சத்ரு.

 

சந்தோஷக் குத்தகை

சாவின் ஒத்திகை.

 

ஆனால்,

என்ன பண்ணும் என் தமிழ்

மதுக்கடைகளின்

நீண்ட வரிசையால்

நிராகரிக்கப்படும்போது..?

 

*வைரமுத்து*




5 comments:

  1. அனைத்து ஆட்சியின்போதும் பொருந்தும் வரிகள்.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்1 December 2021 at 13:56

    கவிதையில்
    மதுவைத் சாடும்
    கவிஞர்களுக்கு
    ஏனோ பொது மேடைகளில்
    மதுவிலக்கை பற்றி
    குரல் கொடுப்பதில்
    ஆர்வம் இருப்பதில்லை.

    ReplyDelete
  3. சத்தியன்1 December 2021 at 13:57

    கவிஞருக்கு பாராட்டுகள்.
    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  4. நரசிம்மன் R.K1 December 2021 at 13:58

    மிகவும் நன்று.

    ReplyDelete
  5. கமலநாதன்2 December 2021 at 17:38

    குடிப் பழக்கத்தின்
    கொடுமையை
    விவரிக்கும்
    கவிதை அருமை.

    ஒரு கவிஞன்
    கூறுகிறான்:

    'டாஸ்மாக்கின்
    முன் நீண்ட வரிசை.

    மருத்துவ மனைகளிலும்
    சிறைக் கூடத்திலும்
    இடமில்லை
    என்கிறது
    தகவல் பலகை....'

    இதுதான் நிதர்சனம்.
    இதை மக்களும்
    அரசும் உணராதது
    வேதனை.

    ReplyDelete