எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 11 December 2021

படித்ததில் பிடித்தவை (“சிறுமியின் மரம்” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*சிறுமியின் மரம்*

 

தாத்தாவுடன்

வாக்கிங் போய்விட்டு

வந்த பேத்தி

அவர் கால் கழுவி வருவதற்குள்

வரைந்ததைக் காட்டினாள்.

 

பேத்தியின் பிஞ்சு கிறுக்கலில்

நிமிர்ந்து நின்றது

ஒரு மரம்.

 

கன்னத்தைத் தட்டி

பாராட்டு சொன்ன

தாத்தாவைக் கேட்டாள் சிறுமி.

 

இது எந்த மரம் சொல்லுங்க..?

 

விழித்து நின்ற தாத்தாவுக்கு

விடை சொன்னாள்.

 

நடந்து போனப்ப

நாம பாத்தமே

நீங்க கூட சொன்னீங்களே

இது புயல்ல சாஞ்ச மரம்னு

 

அதுதான் தாத்தா இது

நான் நிக்க வச்சிருக்கேன்..!

 

*ராஜா சந்திரசேகர்*



8 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. சத்தியன்11 December 2021 at 08:56

    கவிஞருக்கு பாராட்டுகள்.
    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  3. ஸ்ரீதர்11 December 2021 at 10:02

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  4. நரசிம்மன் R.K11 December 2021 at 10:03

    அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. பிரபாகரன். R11 December 2021 at 11:18

    Very Excellent.

    ReplyDelete
  6. சீனிவாசன்11 December 2021 at 13:02

    Excellent.
    Many people
    are living
    still through
    the love of
    few people.

    ReplyDelete
  7. ஸ்ரீராம்11 December 2021 at 13:03

    குழந்தைகளை
    இயற்கை சூழலோடு
    இணைப்பதே ஆக்கப்பூர்வமான
    சிந்தனைகளுக்கு வித்து..!

    ReplyDelete