எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 4 July 2021

*தவிப்பு*

 


இரவு சமையலறை

ஜன்னலை மூடும் நான்.

மரச் சட்டத்திலிருந்து

கம்பிகளுக்கு பின்னே

பயந்தோடும் பல்லிக்குட்டி.

 

மீண்டும் திறந்தேன்

பல்லி வெளியேற

வேண்டுமோ என...

சிறிய

காத்திருந்தலுக்குப்பின்

ஏமாற்றத்துடன் மூடினேன்.

 

காலையில்

வழக்கத்துக்கு மாறாக

முன்னதாகவே எழுந்து

ஜன்னலைத் திறந்ததும்

தாவி வெளியேறியது

அந்த பல்லிக்குட்டி.

 

பிரிந்த தவிப்பில்

தாய் பல்லியும், குட்டியும்...

பிரித்திருப்போமோ என்ற

குற்ற உணர்ச்சியிலிருந்த

என்னைப் போலவே

இரவு முழுவதும்

தூங்கியிருக்காது..!

 

 *கி.அற்புதராஜு*


13 comments:

  1. அம்மையப்பன்4 July 2021 at 07:48

    கவிதை அருமை.

    ReplyDelete
  2. அறிவழகன்4 July 2021 at 08:00

    சிறப்பு.

    ReplyDelete
  3. பாலமுரளி4 July 2021 at 08:41

    யாரையும் தவிக்க
    விட மாட்டோம்.
    அதற்கான வழிகளை
    உருவாக்குவோம்.
    அதன்படி
    வலிகள் இல்லா
    சமுதாயம் உருவாக்குவோம்.

    ReplyDelete
  4. சத்தியன்4 July 2021 at 09:04

    அருமை.

    ReplyDelete
  5. கெங்கையா4 July 2021 at 11:00

    கவிதை
    மிக மிக
    அருமை.

    ReplyDelete
  6. சதீஷ்4 July 2021 at 11:02

    கவிதைக்கு நன்றி.

    ReplyDelete
  7. ராமசந்திரன்4 July 2021 at 11:41

    Sir,
    புனைவுக் கவிதையா?
    அல்லது
    தாங்கள் பெற்ற
    அனுபவத்தை கவிதையாக
    வடித்துள்ளீர்களா?

    அருமை.

    ReplyDelete
  8. அனுபவம்.
    பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  9. ஸ்ரீராம்4 July 2021 at 18:30

    கவிஞரின் தவிப்பு
    பிற உயிர்களின் பால்
    அவருக்கு இருக்கும்
    பரிவினை வெளிப்படுத்துகிறது.
    சக மனிதர்களை மட்டுமல்ல
    சக உயிர்களையும்
    நேசிக்க அறிவுறுத்தும்
    கவிதை அருமை.

    ReplyDelete
  10. கருணாகரன்4 July 2021 at 20:12

    கவிதை அருமை.

    ReplyDelete
  11. ஸ்ரீகாந்தன்4 July 2021 at 22:01

    மிகவும் அருமை.

    ReplyDelete
  12. முரளி CVRDE6 July 2021 at 08:27

    அற்புதம்.

    ReplyDelete