எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 3 July 2021

படித்ததில் பிடித்தவை (“யாரோ தொலைத்த குழந்தை” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*யாரோ தொலைத்த குழந்தை*

 

யாரோ தொலைத்த குழந்தை

என்னிடம் கிடைத்த

கொஞ்ச நேரத்தில்

அன்பாகி இருந்தது.

 

கதை கேட்டது.

கைதட்டிச் சிரித்தது.

பலூன் உடைத்தது.

பெயர் சொன்னது.

கட்டிப் பிடித்துக் கொண்டது.

என்னையும்

குழந்தையாக்கியது.

 

தொலைத்தவர்களை

கண்டுபிடித்து

குழந்தையைத் தர

நிம்மதியும் சந்தோஷமும் சேர

கையெடுத்துக் கும்பிட்டுப் போயினர்.

 

மறுபடி

குழந்தை தொலைந்து போனது

என்னிடமிருந்து..!

 

*ராஜா சந்திரசேகர்*



11 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. செல்லதுரை3 July 2021 at 08:40

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  3. சத்தியன்3 July 2021 at 08:44

    கவிஞருக்கு பாராட்டுகள்.
    கவிதை அருமை.

    ReplyDelete
  4. சீனிவாசன்3 July 2021 at 08:47

    Expresses happiness and warm,
    positive feelings.

    ReplyDelete
  5. ஸ்ரீதர்3 July 2021 at 08:48

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  6. சதீஷ்3 July 2021 at 09:48

    ஒரு நல்ல கவிதையைப்
    பதிவிட்டதற்கு நன்றி..!

    ReplyDelete
  7. பாலமுரளி3 July 2021 at 10:38

    என்னை குழந்தை ஆக்கியது...
    அருமையான கவிதை..!

    ReplyDelete
  8. கெங்கையா3 July 2021 at 11:53

    கவிதை மிக அருமை.
    கவிஞருக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. ஸ்ரீராம்3 July 2021 at 14:15

    குழந்தைகளுடன்
    செலவிடும் பொழுதுகள்
    எல்லாம் இனிய
    நினைவுகளாய் நெஞ்சை
    நிரப்புபவை.

    ReplyDelete
  10. கமலநாதன்6 July 2021 at 06:22

    அருமை

    இறுதிப் பகுதி
    நெஞ்சைத் தொட்டது.

    மூன்றாம் பிறை
    திரைப்படத்தை
    நினைவூட்டியது
    இக் கவிதை.

    ReplyDelete