எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 20 July 2021

படித்ததில் பிடித்தவை (“மழை” – கலாப்ரியா கவிதை)


 
*மழை* 

 

எந்த ஊரை

மழை நனைத்தாலும்

சொந்த ஊர் மழை

பற்றிய செய்தியிலேயே

அதிகம் நனைகிறது

இதயம்..!

 

*கலாப்ரியா*




7 comments:


  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கலாப்ரியா*

    (பிறப்பு: சூலை 30, 1950)
    தமிழின் நவீன கவிஞர்களில்
    குறிப்பிடத்தக்கவர்.
    எழுபதுகளில் எழுதத்
    தொடங்கியவர்.

    கலாப்ரியாவின் இயற்பெயர்
    சோமசுந்தரம்.
    சிறு வயதில் எம்.ஜி.ஆர்
    ரசிகனாய் தி. மு. க
    தொண்டனாக தீவிரமாக
    இயங்கினார்.

    அறிஞர் அண்ணாவின்
    இரங்கல் கூட்டத்திற்காக
    முதன்முதலில் கவிதை
    (இரங்கற்பா) எழுதிய
    சோமசுந்தரம்,
    வண்ணநிலவனின்
    கையெழுத்து இதழான
    பொருநையில் கவிதை
    எழுதும் போது தனக்குத்
    தானே 'கலாப்ரியா' என்று
    பெயர் சூட்டிக்கொண்டார்.
    பின்னர் கசடதபறவில்
    கவிதைகள் வெளிவரும்போது
    கூர்ந்து கவனிக்கப்பட்டார்.
    கசடதபறவிற்கு பின்
    வானம்பாடி, கணையாழி, தீபம்
    ஆகிய இதழ்களில் எழுதினார்.
    கலாப்ரியாவின் கவிதைகளில்
    பாலுணர்வு வெளிப்பாடுகளும்
    சில வேளைகளில் வன்முறையும்
    கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது
    என்று சிலரும், இது அவரது
    கவிதை மாந்தர்கள் வாழ்வை
    ஒட்டியது என்று சிலரும்
    கருதுவதுண்டு {பேராசிரியர்
    தமிழவன் படிகள் இதழில்
    எழுதிய கட்டுரை,
    ஜெயமோகன், கலாப்ரியா
    கவிதைகள் தொகுப்புக்கு
    எழுதியுள்ள முன்னுரைகள்}.

    நெல்லை மாவட்டம்
    கடையநல்லூரில் வங்கிப்
    பணி நிறைவு பெற்றவர்.
    தன்னை சுற்றி நிகழும்
    விஷயங்களை கவிதைகளில்
    பதிவு செய்து வருகிறார்
    'கலாப்ரியா'.

    ReplyDelete
  2. செந்தில்குமார். J20 July 2021 at 07:17

    கவிதை அருமை.

    ReplyDelete
  3. சத்தியன்20 July 2021 at 07:24

    உண்மை அண்ணா.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்20 July 2021 at 07:37

    தொப்புள்கொடி
    உறவு அல்லவா!

    ReplyDelete
  5. செல்லதுரை20 July 2021 at 08:36

    கவிதை அருமை.

    ReplyDelete
  6. கெங்கையா20 July 2021 at 22:43

    அருமையான கவிதை.

    ReplyDelete