எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 21 July 2021

படித்ததில் பிடித்தவை (“பிரிதலும், பிரிதல் நிமித்தமும்” – நா.முத்துக்குமார் கவிதை)

 


*பிரிதலும், பிரிதல் நிமித்தமும்*

 

ஒவ்வொரு முறை

வீடு மாற்றும் போதும்

இழந்து விடுகிறோம் எதையாவது.

 

பாட்டிக்கு பாக்குவெட்டி.

 

தம்பிக்கு

தீப்பெட்டிப் படங்கள்

கிழித்து ஒட்டி வைத்த

கட்டுரை நோட்டு.

 

அப்பாவுக்கு

ஆபிசுக்கு போக வசதியாய்

அருகிலேயே பேருந்து.

 

எனக்கு

ஆடுசதை தெரிய

கோலம் போடும்

எதிர்வீட்டுப்பெண்

மற்றும்

கம்யூனிசம் முதல்

காமசூத்திரம் வரை பேசும்

டீக்கடை நண்பர்கள்.

 

இம்முறை கவனமாய்

போனவாரம் நட்ட

ரோஜாச்செடி முதல்

மாடியில் காயவைத்த

உள்ளாடை வரை

எடுத்தாயிற்று

என்றாலும்

ஏதோவொன்றை

மறந்த ஞாபகம்.

 

சோற்றுக்கு வரும்

நாயிடம்

யார் போய் சொல்வது

வீடு மாற்றுவதை..!

 

*நா.முத்துக்குமார்*




5 comments:

  1. செல்லதுரை21 July 2021 at 08:01

    கவிதை அருமை.

    ReplyDelete
  2. ஸ்ரீகாந்தன்21 July 2021 at 09:05

    கவிதை அருமை.

    ReplyDelete
  3. கெங்கையா21 July 2021 at 09:35

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  4. சீனிவாசன்21 July 2021 at 09:37

    எதார்த்தமான கவிதை.
    மிகவும் அருமை.

    ReplyDelete
  5. ஸ்ரீராம்21 July 2021 at 10:43

    பிற உயிர்கள் பால்
    கவிஞரின் பரிவு
    போற்றுதலுக்குரியது.

    ReplyDelete