எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 8 January 2021

படித்ததில் பிடித்தவை (“பெண்கள் மட்டும்” – கனிமொழி கவிதை)

 

*பெண்கள் மட்டும்*

 

வடநாட்டின் குளிருக்கு

கால் சராயும் பூட்சோடும் பூசாரி.

 

மூனுநாள் விரதம்

ஐயப்பனுக்குப் போதும்.

 

ஆங்கிலேய அர்ச்சகர்

இந்தோனிசியக் கோவிலில்

செருப்புப் போட்டுக் கொள்ளலாமாம்.

கணேசனுக்கும்

கோழிக்கறி படையல்.

 

தென்னாடுடைய சிவனுக்கு

மாதவிலக்குள்ள பெண்கள் மட்டும்

ஆவதே இல்லை..!

 

 *கனிமொழி*


7 comments:

  1. ஸ்ரீராம்8 January 2021 at 09:26

    அடுத்தவர் மதம் குறித்த அருவெருப்பான விமர்சன கவிதை.

    ReplyDelete
  2. கடவுள் இல்லை என்று சொல்லும் கூட்டத்திலிருந்து கடவுள் இருக்கார் என்று உணரவைக்கும் கவிதை

    ReplyDelete
  3. இந்து சமூகத்தில் கோவில் என்பது சக்தி பெட்டகங்களே.
    உயிர் உருவாகும் சூழல் அழிவதால் அந்த நாட்களில் எதிர்மறை சக்திகளே பெண்களுக்கு அதிகமாக இருக்கும்.
    ஆதலால் தான் இயற்கையிலே உள்ளுணர்வுள்ள பெண்மை நிரம்பிய பெண்கள் அந்த நாட்களில் கோவிலுக்கு சென்று சக்தி நிலையை குலைக்க மாட்டார்கள்.
    ஒரு சந்தேகம் பெரும்பாலான மசூதிகளில் பெண்களுக்கு அனுமதி இல்லை. கவிஞர் இது குறித்து ஏதாவது எழதியிருக்கிறாரா?

    ReplyDelete
  4. திரு.ஜெயராமன் ஐயா அவர்களின் கருத்துக்கள் அறிவியல் சார்ந்த,அறிவுபூர்வமான கருத்துக்கள் மிக அருமை.

    ReplyDelete
  5. படம்:
    கங்கை கொண்ட சோழீஸ்வரர் ஆலயம் (கூழமந்தல்).
    நன்றி: *பஞ்ச பூத ஸ்தலம்* புலனம் பதிவு.

    ReplyDelete
  6. கமலநாதன்9 January 2021 at 20:27

    தென்னாடுடைய
    சிவனுக்கு
    மாத விலக்குப்
    பெண்கள் மட்டும்
    ஆவதே இல்லை.

    நறுக்கென்று
    தைக்கும் வரிகள்.

    ஒரு சிறிய
    பின்னூட்டம்.

    மாத விலக்கென்று
    தள்ளி வைத்தது
    கோவில் கருவறை
    மட்டும்தானா?
    என் மனக்
    கருவறையும் தான்.

    மாத விலக்கை
    இயற்கை நிகழ்வு
    அது தீட்டல்ல
    என்ற எண்ணம்
    முதலில் பெண்களுக்கு
    வர வேண்டும்.

    நேற்று கூட ஒரு
    தொலைக் காட்சித்
    தொடரில்
    வீட்டிற்கு விருந்தாளிகள்
    வருவதால்
    அவ் வீட்டில் விலக்கான பெண்கள்
    சமையலறைக்கு வந்து சமையல்
    செய்யக் கூடாது
    என்று காட்சிகள்
    இருந்தன.

    கனிமொழியின்
    கவிதை
    இத்தகைய
    மனச் சிதைவுக்கு
    சாட்டையடி.

    ReplyDelete