எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 14 January 2021

படித்ததில் பிடித்தவை (“இலையசைவு” – தேவதேவன் கவிதை)

 

*இலையசைவு*

 

விருப்பமோ தீர்மானமோ இன்றி

இலையில் தங்கியிருந்த நீர்

சொட்டு சொட்டாக விழுந்துகொண்டிருந்தது

ஆனால் முடிந்தவுடன் ஒரு விடுதலை;

அப்பாடாஎன மேலெழுந்தது இலை

 

அது தன்னில் ஒரு புன்னகை ஒளிரத்

தேவையான ஈரத்தை மட்டுமே வைத்துக்கொண்டு

ஆமோதிப்போ மறுதலிப்போ அல்லாத

ஒரு தலையசைப்பைச் செய்வதாய்

அசைந்துகொண்டிருந்தது இங்குமங்குமாக:

ஒரு நீண்ட கிளையின்

சிறு உறுப்புதான் என ஒரு கணமும்,

முழுமுதல் என ஒரு கணமும்.

 

இங்குமங்குமாய் அல்லாது

வேறெங்கும் செல்லாத

ஒரு பயணியாய்

என்றும் இருக்கிறதைமட்டுமே

அறிந்திருந்தது அது..!

 

*தேவதேவன்*


1 comment:

  1. ஸ்ரீராம்14 January 2021 at 13:52

    இயற்கையின் எல்லா அசைவுகளும் அழகுதான்!

    ReplyDelete