எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 5 January 2021

படித்ததில் பிடித்தவை (“இரண்டு செம்பாறைகள்” – நாகூர் ரூமி கவிதை)

 

*இரண்டு செம்பாறைகள்*

 

பஸ்ஸில் போனபோது

சாலையோரம் இரண்டு செம்பாறைகள்

ஒன்றையொன்று கேலி செய்துகொண்டன.

 

ஒன்று உறுதியளித்தது

இயேசு சீக்கிரம் வருகிறார்..!

 

இன்னொன்று சொன்னது

HMT வாட்ச்சுகள்

உங்கள் நேரத்தைக்

சரியாக காட்டும்..!

 

*நாகூர் ரூமி*


3 comments:

  1. ஸ்ரீராம்5 January 2021 at 09:31

    இயற்கையின் உருவாக்கத்தை விளம்பரத்திற்கு உபயோகிக்கும் மெத்த அறிவாளிகள் கூட்டம் மனிதர்கள்!

    ReplyDelete
  2. இது இறை நம்பிக்கையை கேலி செய்து சொன்னதா, அல்லது கடிகாரத்தின் விளம்பரமாக சொல்லப்படுகிறதா என்பது அவரவர் கண்ணோட்டத்தை பொறுத்தது. இதில் மெத்த அறிவாளி எங்கிருந்து வந்தார் என்று புரியவில்லை. கல் கல்லாகத் தான் இருக்கிறது, நம் கண்ணோட்டம் மாறிவிட்டது அவ்வளவு தான்.

    ReplyDelete
  3. கெங்கையா5 January 2021 at 12:09

    இயற்கையை ரசிக்கவே மனிதன் பிறந்தார்.

    ReplyDelete