எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 20 January 2021

படித்ததில் பிடித்தவை (“அணில்” – பெருமாள் முருகன் கவிதை)

 


*அணில்*

 

பிளாஸ்டிக் குழாயைப் பற்றி

மேலேறிச் செல்கிறது.

 

சுவர்களின் மேல் ஓடுகிறது

சருகுகள் சரசரக்க.

 

மொட்டை மாடியில் உலாத்துகிறது.

 

தண்ணீர்த் தொட்டி மூடிமேல் நின்று

கீழுலகைக் காண்கிறது.

 

ஆளரவம் கேட்டதும்

சட்டெனத் தாவிவிடும்

அணிலுக்குத் தெரியும்

தனக்குரியது

மரம் தானென..!

 

*பெருமாள் முருகன்*

2 comments:

  1. கவிதை அருமை.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்20 January 2021 at 19:55

    அருமை...அருமை...

    ReplyDelete