எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 17 January 2021

படித்ததில் பிடித்தவை (“செக்கிங் பணிக்குப் பெண்கள் தேவை” – மகுடேசுவரன் கவிதை)

 


*செக்கிங் பணிக்குப் பெண்கள் தேவை*

 

பஞ்சுக்குப்பை

மண்டிய தலை

அரிக்கிறது.

 

பனியன் கம்பெனி உஷ்ணத்தில்

சன்னமாய்ச் சுரக்கும் வியர்வையில்

ரவிக்கைக் கையிடுக்கு ஊறி

உறுத்துகிறது.

 

சமயத்தில்

கொண்டுவந்த பழஞ்சோறு

ஊசிப்போய் ஏமாற்றுகிறது.

 

விடிய விடிய பணியிருக்கிறது.

கண்ணுக்குள் மண்ணறுக்கிறது.

 

துணி உதறி உதறி

கைகளிரண்டும்

கதறுகிறது.

 

அவ்வப்போது

பூவாத்தா மடித்துத்தரும் வெற்றிலையில்

அன்பு தடவியிருக்கிறது.

 

தங்கமணியக்கா

தன் குடும்பக் கதை சொன்னால்

எனக்கும் அழுகை வருகிறது.

 

மேற்பார்வையிடும்

மெர்ச்சண்டைசரின் பார்வையில்

இன்பத்திற்கான யாசிப்பு

எப்பொழுதும் தென்படுகிறது.

 

இடையிடையே நினைவும் வருகிறது

குடிகாரப் புருஷ முகம்

ஸ்கூல் போகும் சுப்பரமணி முகம்..!

 

*மகுடேசுவரன்*

3 comments:

  1. நந்தகுமார்17 January 2021 at 08:25

    வாழ்க்கையின் நிதர்சனம். அருமை.��

    ReplyDelete
  2. ஸ்ரீராம்17 January 2021 at 13:46

    ஆயத்த ஆடை தொழிலில் பணிபுரியும் மகளிரின் அவல நிலையை கவிஞர் படம் பிடித்து காட்டியிருக்கிறார். இவர்கள் விடியலில் தான் உண்மையான பெண் விடுதலை இருக்கிறது.

    ReplyDelete
  3. இந்த அவல நிலைக்கு காரணம் குடிக்காரப் புருஷன் மற்றும் அவனைக் குடிக்க வைத்து ஏழைகளின் வாழ்வாதாரத்தையே டாஸ்மாக் மூலம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் இந்த அரசும்தான்..!

    ReplyDelete