எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 7 December 2020

படித்ததில் பிடித்தவை (“இன்னொரு கேலிசித்திரம்” – கல்யாண்ஜி கவிதை)

{ஓவியம்: ஆர்.கே. லட்சுமண்}

*இன்னொரு கேலிசித்திரம்* 

 

காலம் என் கேலிச்சித்திரத்தை

வரைந்துவிட்டது.

உயரத்தையும்

முன்பற்க்களின் இடைவெளியையும்

நிச்சயம் கணக்கில் எடுக்கும்

என்று நினைத்திருந்தேன்.

எடுக்கவில்லை.

என் கூர்மையற்ற மூக்கைக்கூட

அது பொருட்படுத்தக் காணோம்.

கனத்த கண்ணாடியின்றியும்

முகத்தின் சாயல்

பிடிப்பட்டிருந்தது.

அதன் கோடுகளுக்குள்

என் உடல் மொழியனைத்தும் அடங்கியிருந்தன

என் சித்திரத்தை விட

என் கேலிச்சித்திரத்தை ரசிக்க முடிகிறது.

எனினும்

என்னுடைய எந்த அடையாளத்தை

அது ஒளித்துவைத்திருக்கிறது தன்னிடம்

என்ற புதிரை

என்னால் விடுவிக்க முடியவில்லை.

அதற்குள் வரையப்பட்டுவிடுகிறது

அடுத்த நாளில்

இன்னொரு கேலிச் சித்திரம்..!

 

*கல்யாண்ஜி* 

3 comments:

  1. ஸ்ரீராம்7 December 2020 at 17:09

    வரைந்தவருக்கு மட்டுமே தெரியும் அவர் எதை அந்த ஓவியத்தில் ஒளித்திருக்கிறார் என்று. அது படைப்பாளியின் சிறப்பு.

    ReplyDelete
  2. லதா இளங்கோ.7 December 2020 at 19:43

    100% உண்மை.

    ReplyDelete