எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 16 December 2020

படித்ததில் பிடித்தவை (“கவி மரபு” – சேயோன் யாழ்வேந்தன் கவிதை)


*கவி மரபு* 

 

புறநானூறு

பொதுமக்களுக்கும்

அகநானூறு

மன்னர்களுக்கும்

எழுதப்பட்டது.

 

எதிர்க்கேள்வி கேட்காமல்

சக மனிதனைக் கொல்வதற்கு

வீரம் கற்பிக்கப்பட்டது

விழுப்புண் புகழப்பட்டது.

 

பூனையை விரட்டியது

முறத்தால்

புலியை விரட்டியதாக

மிகைப்படுத்தப்பட்டது.

 

மன்னனுக்காகச் சாவது

நாட்டுக்காகச் சாவதாக

நாடகமாடப்பட்டது.

 

நல்ல மன்னனிடம்

அடிமைப்பட்டுவிடாமலிருக்க

நமது மன்னனிடம்

அடிமையாய் வாழ்வது

நாட்டுப்பற்றென்று

நம்பவைக்கப்பட்டது.

 

போர்களில்

மாண்டனர் மக்கள்

வென்றனர் மன்னர்.

 

துதிபாடிகளும்

அடிவருடிகளும்

தூக்கிப்பிடித்த

மன்னர் மரபை

கொஞ்சமும்

பெருமை குலையாமல்

கட்டிக் காக்கிறதெங்கள்

கவி மரபு..!

 

*சேயோன் யாழ்வேந்தன்*


1 comment:

  1. ஸ்ரீராம்16 December 2020 at 12:22

    இன்றைய அரசியல் சூழலுக்கு நூறு சதம் பொருத்தமான கவிதை.

    ReplyDelete