எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 22 December 2020

படித்ததில் பிடித்தவை (“ஏழையின் சிரிப்பு” – சேயோன் யாழ்வேந்தன் கவிதை)

 


*ஏழையின் சிரிப்பு*

 

சரக்கடிக்கும்போது

மட்டும்

கொஞ்சம் சிரிக்கிறான்

மாரி.

 

சுற்றி நின்று

சிரிக்கிறது

அவன் சுற்றம்.

 

ஏழையின் சிரிப்பில்

இறைவனைக் காண்கிறது

அரசு..!

 

 *சேயோன் யாழ்வேந்தன்*


5 comments:

  1. கவிதா ராணி22 December 2020 at 07:31

    ஒரு தலைமுறையை போதையில் மூழ்கடித்து தமிழ்நாட்டையே குட்டிச்சுவராக்கி விட்டது இந்த அரசு. பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய மாணவர்கள் மதுக்கடையில் நிற்பதைப் பார்க்கும் போது அடுத்த தலைமுறையும் அழிக்கத்தொடங்கிவிட்டது. வேதனையான விஷயம். வேறு நல்ல வழிமுறைகளில் அரசுக்கு வருமானம் பெற இந்த அரசும், அதிகாரிகளும் முயற்சிக்க வேண்டும்.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்22 December 2020 at 08:01

    காக்க வேண்டிய அரசே தன் கஜானா நிரம்ப தம் மக்களின் பெரும்பான்மையை குடிகாரர்கள் ஆக்கிய பெருமை வேறு எங்கிலும் காண முடியாதது.

    ReplyDelete
  3. நந்தகுமார்22 December 2020 at 08:23

    திராவிட கட்சிகளின் ஆட்சியின் சாதனை.

    ReplyDelete
  4. மதுபாலா22 December 2020 at 21:33

    மதுவுக்கும் ஆசிட்டுக்கும் வித்தியாசம் பெரிதாக ஒன்றும் இல்லை. மீத்தைல் ஆல்கஹால் என்பது டாய்லெட் கழுவும் ஆசிட், பெயின்ட், வார்னிஷ் போன்ற பொருள்களில் பயன்படுத்தப்படும் ரசாயனம். ஈத்தைல் ஆல்ஹகால் என்பது மதுபானங்களில் போதைக்காக கலக்கும் ரசாயனம். இவை இரண்டும் அண்ணன் - தம்பி போலத்தான். இரண்டுக்கும் ஒரே வாசனை, ஒரே சுவை. மீத்தைல் ஆல்கஹாலை குடித்தால், ஐந்து நிமிடங்களில் பார்வை பறிபோகும். 15 நிமிடங்களில் மூளை செயல் இழக்கும். 30 நிமிடங்களில் உயிர் போகும். இதே வேலையைத்தான் ஈத்தைல் ஆல்கஹாலும் கொஞ்சம், கொஞ்சமாக செய்கிறது. மீத்தைலுக்கு நிமிடங்கள் என்றால் ஈத்தைலுக்கு ஆண்டுகள். அவ்வளவுதான்!

    ReplyDelete
  5. "புகை பிடித்தால் இறப்பாய்
    மது குடித்தால் இறப்பாய்
    இரண்டும் விற்றால்
    வாழ்வில் சிறப்பாய்..!"

    - கவிஞர் தமிழன்பன்.

    ReplyDelete