எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 27 December 2020

*தப்பாட்டம்*

 


நகர சாலையில்

நீத்தார்

இறுதி ஊர்வலம்.

 

போக்குவரத்து நெரிசலில்

சிக்கிய பேருந்தின்

ஜன்னல் ஓரம்

உட்கார்ந்திருந்த சிறுவன்

அருகில் அமர்ந்திருந்த

அம்மாவின்

அடக்குதலையும் மீறி

தோள்களை குலுக்கி

ஆட ஆரம்பித்தான்

தப்பாட்டத்திற்கு..!”

 

*கி.அற்புதராஜு*


6 comments:

  1. தப்பாட்ட இசை
    சிறுவனை
    கிளர்ந்து
    தோள்களை குலுக்கி
    ஆட வைக்கிறது.

    பேருந்தில்
    தெரியாதவர்கள் முன்
    அவன் ஆடுவது
    அம்மாவுக்கு
    தப்பான ஆட்டமாக
    அடக்க வைக்கிறது.
    வீட்டில்
    இதே ஆட்டத்தை
    கொண்டாடியிருப்பார்கள்.

    இந்தக் காட்சி
    போக்குவரத்தில்
    சிக்கியவர்களுக்கு
    (நான் உள்பட)
    வேறு வேறு
    கோணங்களில்
    எண்ணங்களைத்
    தூண்டுகிறது..!

    ReplyDelete
  2. Manivannan, S.P.Koil.27 December 2020 at 06:32

    அனைவருக்கும் பொருந்தும்.
    அருமை.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்27 December 2020 at 13:29

    ரசனையை வெளிப்படுத்த இடம், சூழல் ஒரு பொருட்டல்ல.

    ReplyDelete
  4. ரவிசந்திரன்27 December 2020 at 17:17

    வலுவான குலுக்கல்.

    ReplyDelete
  5. கவிதா ராணி28 December 2020 at 19:05

    மகனின் ஆட்டம் அம்மாவுக்கு தப்பாட்டம்.

    ReplyDelete