எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 30 January 2022

*பார்வை பிறழ்வு*

 

கூட்டமில்லாத ரயிலில்

கூடை நிறைய

வாழைப்பழத்துடன்

நான் வாங்கிக் கொள்வேன்

என்ற எதிர்பார்ப்பில்

விற்பவரின் பார்வையும்...

 

அவரது பார்வையை

உணர்ந்து

எனது எண்ணம்

செயலாகும் முன்னரே,

 

என்னை கடந்து

சென்று விடுகிறது

அந்த எதிர்பார்ப்பும்...

அதனை உணர்ந்த

எனது செயல்பாடும்..!

 

*கி.அற்புதராஜு*


9 comments:

  1. ஸ்ரீராம்30 January 2022 at 08:49

    உண்மை தான்.

    ReplyDelete
  2. அண்ணனுக்கு தினமும் ரயில் பிரயாணத்தில் பல அனுபவங்கள். எல்லா வர்க்கத்தின் நிலையறிய வசதியாக

    ReplyDelete
  3. மோகன்தாஸ். S30 January 2022 at 09:47

    பாராட்டுகள்.
    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  4. சீனிவாசன்30 January 2022 at 10:26

    கவிதை மிகவும் அருமை.

    சில நேரங்களில்
    நம் சிந்தனையை
    நேரம் வென்று விடுவதாக
    நினைக்கிறோம்.
    ஆனால், ஆழமான
    (தெளிவான)
    சிந்தனைகள் தான்
    வெற்றி பெறுகின்றன.
    (அதன் வேரை
    விட்டுச் சென்று,
    அடுத்த வாய்ப்புக்காக).

    ReplyDelete
  5. கவிதை அருமை.

    ReplyDelete
  6. ஸ்ரீகாந்தன்30 January 2022 at 14:17

    கவிதை அருமை.

    ReplyDelete
  7. கெங்கையா30 January 2022 at 15:23

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  8. எதார்த்தம் அருமை

    ReplyDelete
  9. Finishing para is wonderful.

    ReplyDelete