எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 28 January 2022

படித்ததில் பிடித்தவை (“நீயும்... நானும்...” – நகுலன் கவிதை)

 


*நீயும்... நானும்...*

 

உனக்கு

நீ

இருப்பதால்

நான்

உண்டு;

எனக்கு

நீ

இல்லையென்றால்

நான்

இல்லை..!

 

*நகுலன்*



4 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *நகுலன்*

    தமிழ் எழுத்தாளர்.
    பிறப்பு 1921ஆம் ஆண்டு.
    (இ. மே 17, 2007)

    டி. கே. துரைசாமி என்ற
    இயற்பெயர் கொண்ட
    நகுலன் பிறந்தது
    தமிழ்நாட்டில் உள்ள
    கும்பகோணத்தில் ஆனாலும்
    இறுதிவரை வாழ்ந்தது
    கேரளத்தின் திருவனந்தபுரத்தில்.
    அண்ணாமலைப்
    பல்கலைக்கழகத்தில் தமிழில்
    முதுகலைப் பட்டம் பெற்றவர்.
    ஆங்கிலத்தில் முதுகலையும்
    ஆராய்ச்சிப் பட்டமும் பெற்றவர்.
    திருவனந்தபுரம் இவானியர்
    கல்லூரியில் ஆங்கிலப்
    பேராசிரியராகப் பணியாற்றி
    ஓய்வு பெற்றவர்.

    இவருடைய ஆங்கில
    படைப்புகளை இயற்பெயரிலும்,
    தமிழ் படைப்புகள் புனைப்
    பெயரிலும் எழுதி வந்தார்.
    தமிழ்ச் சிறுகதைகளில் பல
    புதிய பரிசோதனைகள்
    செய்தவர்.
    பழந்தமிழ் இலக்கியத்திலும்
    நவீன ஆங்கில இலக்கியத்திலும்
    மிகுந்த ஈடுபாடுகொண்டவர்.
    இவர் தொகுத்த 'குருஷேத்திரம்'
    இலக்கியத் தொகுப்பு, தமிழில்
    மிக முக்கியமானதாகும்.
    விளக்கு விருது, ஆசான் விருது
    உள்ளிட்ட பல விருதுகளைப்
    பெற்றவர் நகுலன்.
    நகுலனின் கவிதைகள்
    பெரும்பாலும் மனம்
    சார்ந்தவைகள் அவர் மனிதனின்
    இருப்பு சார்ந்தே கவிதைகளை
    வெளிப்படுத்தியுள்ளார்.

    ReplyDelete
  2. சத்தியன்28 January 2022 at 09:06

    கவிதை மிக அருமை.
    பாராட்டுகளும்,
    வணக்கங்களும்
    கவிஞருக்கு!

    ReplyDelete
  3. ஜெயராமன்28 January 2022 at 10:04

    கவிதை மிக அருமை.

    ReplyDelete