எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 4 September 2021

படித்ததில் பிடித்தவை (“காற்றாடியும் குழந்தையும்” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*காற்றாடியும் குழந்தையும்*

 

கடற்கரையிலிருந்து

திரும்பிய போது

குழந்தைக் கேட்டாள்

 

அப்பா நான் தொலைச்ச

காத்தாடி என்னாவும்..?”

 

வானத்தில

ஒரு அம்மா இருக்கா

அவ பத்திரமா

இது மாதிரி தொலைஞ்ச

காத்தாடிகளப் பாத்துக்குவா.”

 

அப்பாவின் பதிலில்

தூங்கத் தொடங்கினாள்

குழந்தை.

 

புன்னகைத்தாள் அம்மா.

 

தன் குழந்தையை

நினைத்தபடி

ஓட்டினார் ஆட்டோக்காரர்..!

 

*ராஜா சந்திரசேகர்*




2 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. ஸ்ரீராம்4 September 2021 at 15:12

    மிக அருமை.
    பெற்றவர்களின்
    நம்பிக்கை தரும்
    வார்த்தைகள் தான்
    அவர்தம் குழந்தைகளுக்கு
    வாழ்வின் நம்பிக்கை.

    ReplyDelete