எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 5 September 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


கொலுசு

“போன வருஷச் சாரலுக்கு
குற்றாலம் போய்
கை (ப்) பேனா மறந்து
கால் (ச்) செருப்புத் தொலைந்து
வரும் வழியில் கண்டெடுத்த
கல் வெள்ளிக் கொலுசு ஒண்ணு
கற்பனையில் வரைந்த
பொற் பாத சித்திரத்தை
கலைக்க முடியலியே இன்னும்..!”
                                        
                                           -  விக்ரமாதித்தியன்.
                 (ஆகாசம் நீல நிறம்)


[இந்த கவிதை புரிவதில் உங்களுக்குச் சிரமம் இருக்காது என்று தோன்றுகிறது. கை (ப்) பேனா, கால் (ச்) செருப்பு ப்பன்னா, ச்சன்னாவை
எதற்குக் கவிஞர் அடைப்புக் குறிக்குள் போட்டார் என்று கேட்டு உங்களைச் சங்கடப்படுத்த விரும்பவில்லை.  -  எழுத்தாளர். சுஜாதா.]


தெரிந்தால் சொல்லுங்களேன்...

No comments:

Post a Comment