எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 4 September 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


நகரத்தை இன்னும்...
“தலை கவிழ்த்து
கால்வாயில் அருந்திய நீரை
பாலிதீன் பாக்கெட்களைக்
குத்திக் கிழித்து குடித்தும்
புழுப் பூச்சி கனிகளை
உண்டதை மறந்து
க்ரீம் ரொட்டிகளைத் தின்றும்
மரங்களில் கட்டிய கூடுகளை
செல்போன் டவரில் கட்டி
சந்ததி விருத்தி செய்தும்
வாழக் கற்றுக்கொண்டன
பறவைகள்...

வசைப்பாடிக் கொண்டிருக்கிறேன்
பெருநகரத்தை இன்னும்..!”

                                                                    - கீர்த்தி.

No comments:

Post a Comment