எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 18 March 2021

படித்ததில் பிடித்தவை (“சங்கடம்” – வண்ணநிலவன் கவிதை)

 


*சங்கடம்*

 

எப்போதும் என்னை

எங்காவது அழைக்கின்றனர்

நண்பர்கள்.

 

சிந்தனைச் சிறகடித்துப் பறக்க

கூட்டத்துக்குக் கூப்பிடுகின்றனர்.

 

வேறு சிலர்

நாட்டைத் திருத்த வா வென்கின்றனர்.

 

பிரம்மானந்த சுவாமிகளோ

ஞானந்தேட வாயேன் என்கிறார்.

 

இதில் பூனைகள் வேறு

தங்களோடு

விளையாட வரவில்லையென்று

கோபிக்கின்றன.

 

யாருடன் போவேன்?

யாருக்கென்று வாழ்வேன்?

 

*வண்ணநிலவன்*





5 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    வண்ணநிலவன்
    (பிறப்பு: திசம்பர் 15, 1949)
    ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார்.
    தூத்துக்குடி மாவட்டம்,
    தாதன்குளம் என்னும்
    கிராமத்தில் பிறந்த
    இவரின் இயற்பெயர்
    உ. ராமச்சந்திரன்
    ஆகும்.
    இவர் பாளையங்கோட்டை,
    திருநெல்வேலி மற்றும்
    ஸ்ரீ வைகுண்டம் ஆகிய
    ஊர்களில் படித்தார்.
    ‘துக்ளக்’ பத்திரிகையிலும்
    பின்னர் ‘சுபமங்களா’
    பத்திரிகையிலும் ஆசிரியர்
    குழுவில் சிறிது காலம்
    வேலைப் பார்த்தார்.
    தமிழில் குறிப்பிடத்தகுந்த
    திரைப்படமான ருத்ரையாவின்
    ‘அவள் அப்படித்தான்’
    திரைப்படத்தின்
    வசனகர்த்தாவாகவும்
    பணியாற்றியுள்ளார்.
    இவர் நாவல், சிறுகதைகள்
    மற்றும் கவிதைகள்
    போன்றவற்றை எழுதி
    அவை நூல்களாக
    வெளி வந்திருக்கின்றன.

    ReplyDelete
  2. உண்மையான வாழ்க்கை பிரச்சினை. இவர் டிவி, யூ ட்யூப், முகநூல் போன்றவற்றைக் கடந்து விட்டார் போலும்.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்18 March 2021 at 08:33

    இன்றைய சூழலில்
    எல்லா மனிதர்களுக்கும்
    பொருந்தும் சங்கடம்.

    ReplyDelete
  4. கெங்கையா18 March 2021 at 10:15

    வண்ணநிலவன் கவிதைக்கு
    வாழ்த்துக்கள் பல.

    ReplyDelete