*வயிறு*
“இரவு கண்விழிக்கும்
இளங்காலைப்
பொழுதொன்றில்
ஒல்லி
தேகத்தின்
ஒட்டிய
வயிறோடு
சாலையோரக்
கால்வாயை
சுத்தப்படுத்திக்கொண்டிருந்த
சிலரோடு
கார்களைக்
கழுவிக்கொண்டிருந்த
ஒருவனையும்
பார்த்தபடி
போய்க்கொண்டிருந்தேன்
- அந்த
பூங்காவைச்
சுற்றி
பெருத்த
வயிற்றின்
சுற்றளவில்
- ஒரு
இன்ச்சாவது
குறைத்துவிடும்
உறுதியோடு..!”
*செல்வராஜ் ஜெகதீசன்*
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDelete*செல்வராஜ் ஜெகதீசன்*
1969 ஆம் ஆண்டு
சென்னையில் பிறந்தார்.
தற்சமயம் பணிநிமித்தம்
(மின்பொறியாளர்)
அபுதாபியில்
(ஐக்கிய அரபு குடியரசு)
வசித்து வருகிறார்.
அருமை.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteஏற்ற தாழ்வுகள்
ReplyDeleteமனிதனின் ஜாதி என்ற
கவிஞர் கண்ணதாசனின்
பாடல் வரிகளை
நினைவில் கொண்டு வரும்
கவிதை.
கவிதை அருமை.
ReplyDelete'இரவு கண் அயரும்'
ReplyDeleteஎன்பதே சரி.
ஏற்ற தாழ்வுக்கான
குறியீடாக வயிறு
மட்டுமல்ல,
இரவு பகலும்
இருக்கிறது கவிதையில்.