எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 25 February 2022

படித்ததில் பிடித்தவை (“தன் வரலாறு” – கல்யாண்ஜி கவிதை)

 


*தன் வரலாறு*

 

“சுள்ளி பொறுக்க வந்த முதியவர்

மழை பெய்த ஈரத்தரையில் 

குச்சியால் கீறிக்கொண்டே போகிறார்


இதைவிடச் சரியாக 

அவருடைய தன் வரலாற்றை

அவரால் எழுதமுடியாது..!

 

*கல்யாண்ஜி*

{அந்தரப்பூ கவிதை நூலிலிருந்து.}




7 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    வண்ணதாசன்
    (பிறப்பு: 1946)
    என்ற புனைப்பெயரில்
    சிறுகதைகளும்,
    கல்யாண்ஜி என்ற
    புனைப்பெயரில்
    கவிதைகளும்
    எழுதுபவரின்
    இயற்பெயர்,
    சி.கல்யாணசுந்தரம்.
    இவர் தமிழ்நாடு,
    திருநெல்வேலியில்
    பிறந்தவர்.
    இவரது தந்தை
    இலக்கியவாதி
    தி. க. சிவசங்கரன் ஆவார்.
    இவர் தந்தையும்
    சாகித்ய அகாதமி விருது
    பெற்றவர்.
    நவீன தமிழ்ச் சிறுகதை
    உலகில் மிகுந்த கவனம்
    பெற்ற எழுத்தாளரான
    வண்ணதாசன்,
    தீபம் இதழில் எழுதத்
    துவங்கியவர்.
    1962 ஆம் ஆண்டில் இருந்து
    இன்று வரை தொடர்ந்து
    சிறுகதைகள் எழுதி வருகிறார்.
    இவரது 'ஒரு சிறு இசை'
    என்ற சிறுகதை நூலுக்காக
    இந்திய அரசின் 2016 ஆம்
    ஆண்டுக்கான
    சாகித்திய அகாதமி விருது
    கிடைத்தது.

    இவரது சிறுகதைகள்
    பல்கலைக்கழகங்களில்
    பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன.
    "இலக்கியச் சிந்தனை"
    உள்ளிட்ட பல முக்கிய
    விருதுகளைப் பெற்றிருக்கிறார்
    வண்ணதாசன்.
    2016 "விஷ்ணுபுரம் விருது"
    இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
    சூன் 10, 2018-ல் கனடா தமிழ்
    இலக்கியத் தோட்டம் எனும்
    அமைப்பு தமிழ்
    இலக்கியத்திற்கான வாழ்நாள்
    சாதனையாளர் விருதினை
    இவருக்கு வழங்கியது.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்25 February 2022 at 09:05

    கிராமப்புற மக்களின்
    ஏழ்மையை அழகாக
    பதிவு செய்த கவிதை.
    மிக அருமை.

    ReplyDelete
  3. சத்தியன்25 February 2022 at 09:07

    கவிதை மிக அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  4. சிவபிரகாஷ்25 February 2022 at 09:30

    ஒரு நெருடல்,
    ஏதோ ஒன்றை சொல்கிறது...
    முதுமையா அல்லது எழ்மையா..?

    ReplyDelete
  5. ஜெயராமன்26 February 2022 at 17:11

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  6. Gambling | Drmcd
    Casino: No Deposit Bonus 제주도 출장마사지 Codes Casino: Yes. Deposit 당진 출장마사지 Bonus: No 포항 출장마사지 Deposit Bonus 충청남도 출장안마 Codes; Deposit Bonus: Free Spins; 안양 출장안마 Bonus Code: 1NJ10.

    ReplyDelete