எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 26 February 2022

படித்ததில் பிடித்தவை (“வாடகை வீடு” – ப்ரியன் கவிதை)

 


*வாடகை வீடு*

 

ஆணி அடித்த ஒரு சந்தர்ப்பத்தில்

சொல்லால் அறைந்து

அவ்வாணியிலேயே

தொங்க விட்டுச்செல்கிறாய்

என்னை..!

 

கொஞ்சம்

வேகமாக பாதம் பதித்தால்

விரிசல் காண்பதாய்

வாதம் செய்ய ஓடோடி

வருகிறாய்..!

 

உன் செல்ல பிள்ளை

பிசாசுகளின்

காட்டுக் கத்தலில்

கழிக்கப்படுகின்றன

என் அமைதி..!

 

மொட்டை மாடிக்கான

வழியைக் கூட

உன் வீட்டுக்குள்தான்

ஒளித்து வைத்திருக்கிறாய்..!

 

யோசித்துப் பார்த்தால்,

வாடகை மட்டுமல்ல

என் சுதந்திரத்தின்

பெரும் பகுதியை

அடகு வைத்துத்தான்

குடிபுகுந்திருக்கிறேன்..!

 

எலி வங்குக்கு ஒப்பான

உன் வீட்டில்..!

 

*ப்ரியன்*

{வங்கு – வளை}

7 comments:

  1. லதா இளங்கோ26 February 2022 at 10:57

    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்26 February 2022 at 11:05

    வாடகைதாரர்களின்
    வர்ணிக்க முடியாத
    அவஸ்தைகளை
    அற்புதமாக வடித்த
    கவிதை.

    மிக நன்று!

    ReplyDelete
  3. சங்கர்26 February 2022 at 14:12

    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  4. செல்லதுரை26 February 2022 at 14:15

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  5. நல்ல கவிதை. படிக்கும்போதே மூச்சு முட்டுகிறது.

    ReplyDelete
  6. கெங்கையா26 February 2022 at 19:54

    கவிதை மிக அருமை.

    ReplyDelete