எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 29 May 2021

படித்ததில் பிடித்தவை (“இழிவு” – பாலபாரதி கவிதை)



*இழிவு*

 

எவரிருத்தலையும் உணராது

எல்லார் முன்னிலையிலும்

மேல் சட்டை கழற்றி

பனியனை உதறி

கைகளுக்குள் புகுந்து

தொப்பை தடவி

கால் மீது கால் போட்டமர்ந்து

உரக்க பேசி சிரிக்கும்

ஆண்களின் பயணம்

தொடர்கிறது.

அப்போதெல்லாம்

தலை குனிந்து

நகம் கடித்து

புத்தகம் தேடுவது போல்

பாவனை செய்து

பார்வையை வெளியேற்றி

சமூக அடிமையாய்

ஒடுங்கச் செய்கிறது

பெண் பயணிகளை..!

 

*பாலபாரதி*

{சில பொய்களும் சில உண்மைகளும் 

– கவிதை தொகுப்பிலிருந்து}





7 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கே. பாலபாரதி*
    ஒரு இந்திய பெண்
    அரசியல்வாதி.
    தமிழ்நாடு சட்டமன்ற
    உறுப்பினராகவும்
    இருந்தவர்.
    இவர் இந்திய பொதுவுடமைக்
    கட்சி (மார்க்சியம்) சார்பாக
    2006 முதல் திண்டுக்கல்
    சட்டமன்ற உறுப்பினராகப்
    பணியாற்றி வந்தார்.
    இவர் பி.எஸ்.சி. பட்டதாரி ஆவார்.

    திருமணம் ஆகாதவர்.
    பிரச்சனைகளுக்கான பல்வேறு
    போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.
    கவிஞராகவும், எழுத்தாளராகவும்
    இருக்கிறார்.

    ReplyDelete
  2. செந்தில்குமார். J29 May 2021 at 06:59

    கவிதை அருமை.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்29 May 2021 at 08:37

    ஆண் ஆதிக்க
    மனோபாவத்தை
    மென்மையாக
    சாடும் கவிதை.
    மிக அருமை.

    ReplyDelete
  4. சத்தியன்29 May 2021 at 08:45

    ஆடவரில் மாற்றம் அவசியம்.

    ReplyDelete
  5. மேல்சட்டை கழற்றி
    வேலைப்பார்க்கும்
    அல்லது புரோகிதம்
    செய்யும் ஆண்களை
    காணும்போது
    வராத அருவருப்பு
    பொதுவெளியில்
    வருவதேன்?
    சமூக மாற்றமா?
    மேல் தட்டு பெண்டிர்
    மனோபாவமா?

    ReplyDelete
  6. கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  7. கவிதை மிக அருமை.

    ReplyDelete