எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 16 October 2014

நாம் தொலைத்துவிட்ட மனிதம்..?


“பண்டிகைக் கால
ரெங்கநாதன் தெருப்போல
நிரம்பி வழிந்த
ரயில் நிலையத்திற்குள்
நுழைந்த ரயிலில்
பயணித்தவர்களை
இறங்க விடாமல்
தள்ளுமுல்லுவுடன்
நுழைந்தனர்
ஏறும் பயணிகள்...
ஜன்னல் வழியே
கர்சீப் போட்டு
இடம் பிடித்தனர்
சில அறிவாளிகள்...

புறப்பட்ட ரயில் 
முழுவதும்
இளைஞர்களும், 
அறிவாளிகளும்
உட்கார்ந்தும்...

முதியோர்களும்,
சில மாற்றுத்திறனாளிகளும்,
அறிவிலிகளும்
நின்றுக்கொண்டேயும்
பயணித்தனர்..!”

                              -  K. அற்புதராஜு.

No comments:

Post a Comment