எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 9 August 2014

பதிவுகள்...








பதிவுகள்...
“மனதுக்கு பிடித்தவர்களின்
பெயரை தமது பெயருடன்
இணைத்து எழுதுகிறார்கள்
எல்லோருமே...
எதாவது ஒரு வயதில்.

சிலர் யாருக்கும் தெரியக்கூடாதென...
பேப்பரில் எழுதி
சுக்கு நூறாக கிழித்தும்,
கடற்கரை மணலில் எழுதி
அலை வந்து அழித்தும்,
கார் கண்ணாடி அழுக்கில்
எழுதி சுத்தம் செய்தும்
கொண்டிருக்கிறார்கள்...

சிலர் எல்லோருக்கும் தெரியும்படி...
மலைகளில் பதிவுகளாக,
மரங்களில் வடுக்களாகவும்,
உடலில் பச்சைக் குத்தியும்,
பேருந்து, ரயில்களில்...
அழியாத மையிலும்
எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களில்...
சிலர் இணைந்திருப்பார்கள்..!
சிலர் பிரிந்து இருப்பார்கள்..!”
                             
                         -   K. அற்புதராஜு.

No comments:

Post a Comment