எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 12 August 2014

படித்ததில் பிடித்தவை (சுஜாதாவின் மைக்ரோ கதைகள்)


சுஜாதா எழுதிய மைக்ரோ சிறுகதைகள் இரண்டு:


 1.   புகழ் 

உலகின்  மிகவும்  பிரபலமானவர்குண்டான   பிரச்சினைகள் 
எனக்கு  அத்துப்படி.  தினமும்  ஆட்டோகிராப்  வாங்க  வரும் கூட்டத்திற்கு அளவில்லை. எனக்கு ரசிகர்கள் இல்லாத இடமே இல்லை எனலாம். வயது வித்தியாசம் பாராமல் அனைவரும் என்னோடு  போட்டோ எடுத்து கொள்வார்கள். எதற்குமே  முகம்  சுளிக்காமல்  அனைவரின்  அபிலாசைகளை பூர்த்தி செய்ய கற்று கொடுத்தார்கள். 

இருப்பினும் புகழ் போதை  உச்சியிலேறி  நான்  யார் தெரியுமாவென  மமதையுடன் கேட்டதேயில்லை.

அன்றும் வழக்கம் போல பணி முடித்து இல்லம் திரும்பி கொண்டு இருந்தேன். வழியில் யாரும் என்னை கண்டு கொள்ளவேயில்லை. 

டிஸ்னிலேன்ட்  உடை மாற்றும் இடத்தில எனது மிக்கி உடை சிரித்து கொண்டு இருந்தது.
** ** **


2.   சிரமம் 

அம்மா அடிக்கடி சொல்வாள். சின்ன வயதில் நான் செத்து பிழைத்த கதையை..

கக்குவான் இருமல், வித  விதமான  காய்ச்சல்  என்று  சொல்லி கொண்டே  போவாள். பார்க்காத வைத்தியமில்லை, நாட்டு வைத்தியரிலிருந்து ஹோமியோபதி, ஆங்கிலம் என்று எதையும் விட்டு வைக்கவில்லை.

நரை புரை தட்டியபோதும் தன் வேலைகளை தட்டு தடுமாறி  தானே செய்வாள். எவ்வளவோ சொல்லியும் கேட்டதேயில்லை. பதிலுக்கு  ஏதேனும் செய்ய என் மனம் பரிதவித்ததுண்டு.

நண்பன் தோளை தட்டியதும் திரும்பினேன். "புண்ணியாத்மா.. சிரமம்  குடுக்காம போய்டா.."

சிரமப்பட்டு ஒரு சொட்டு கண்ணீர் வந்தது...

** ** **

No comments:

Post a Comment