எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 8 July 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)

எழுத்தாளர் சுஜாதா ரசித்த கவிதை...

வரம் கேட்கிறேன்

“வரம் கேட்கிறேன்.
வேறென்ன கேட்பேன்
பராசக்தி.

வில்லங்கம் எதுவுமில்லா
காணிநிலம்.
அதில்
தீப்பிடிக்காத
ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை.

அடைப்பில்லா
ட்ரைனேஜ் கனெக்க்ஷன்.

வைரஸ் வராத
கம்ப்யூட்டர்.
விளையாடி மகிழ
வெப்சைட்.

சரியான முகவரியோடு
எலக்க்ஷன் கார்டு.

பக்க விளைவில்லா
பாஸ்ட் புட் அயிட்டங்கள்.
மறக்காமல்
கொஞ்சம் மினரல் வாட்டர்.
வேறென்ன கேட்பேன்
பராசக்தி?

இவை யாவும்
தரும் நாளில்...
அதிர்ச்சியில்
இறக்காமல் இருக்க
கொஞ்சம் ஆயுள்..!”

              -  எம்.ஜி. கன்னியப்பன்.
(என் நந்தவனத்துப் பட்டாம்பூச்சிகள்)

No comments:

Post a Comment