எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 16 July 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)மனநல மருத்துவர் முன் நான்...

“அழைத்து வந்தவர்கள் சொன்னதோ
ஆயிரம் காரணங்கள்...

பிச்சைக்காரனுக்கு ஐம்பது ரூபாய்
போட்டதைச் சொன்னார் ஒருவர்.

நாய்க்குட்டி இறந்த சேதி கேட்டு
விமானப்பயணத்தை ரத்து செய்ததைச்
சொன்னது இன்னொரு நண்பன்.

மகனின் தேர்ச்சி அட்டையில்
‘தேர்வு என்பதே
முட்டாள்தனமான ஒன்று’
என்று கையொப்பமிட்டதைச்
சொல்லி வருந்தினாள் மனைவி.

எனக்கோ வேறு கவலை...
மீன்களை அடைத்து வைத்திருக்கும்
இந்த மேஜை மீன் தொட்டியை
எப்படி உடைப்பது..?”
                                                    -  தி. அய்யப்பன்.

No comments:

Post a Comment