எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 11 October 2021

படித்ததில் பிடித்தவை (“ஆட்டத்தின் முடிவில்...” – சௌவி கவிதை)

 


*ஆட்டத்தின் முடிவில்...*

 

வெளிச்சம் கொட்டிய விளக்குகள்

அணைக்கப்பட்டாயிற்று.

மேசையின் மீதேறி

அமர்ந்துகொண்டன

உட்காரப் பயன்படுத்தும்

நாற்காலிகள்.

உள்ளே வந்து சென்ற

பாதங்களையெல்லாம்

தண்ணீரால் கழுவி வெளியேற்றி

தரையைச் சுத்தப்படுத்தியாயிற்று.

பாய்லரில் கரியை நிரப்பி

மீந்த பாலில் தேநீர் தயாரித்துக்

குடிக்கும்

அந்தக்கடைச் சிறுவர்களுக்கு

தேநீர் இனிப்பதுமில்லை...

கசப்பதுமில்லை..!

 

*சௌவி*



5 comments:

  1. 13.10.2021 தேதியிட்ட
    ஆனந்த விகடன் இதழில்,
    'சொல்வனம்' பகுதியில்
    திருப்பூர் மாவட்டம்
    சின்னப்பாப்பனூத்து கிராமத்தைச்
    சேர்ந்த சௌவி எழுதிய
    'ஆட்டத்தின் முடிவில்' என்ற
    கவிதை இடம் பெற்றிருந்தது.

    07.10.2021 வியாழன் காலை
    இதழ் வெளிவந்ததும்,
    அந்தக் கவிதையை வாசித்த
    கவிஞர் வைரமுத்து,
    அவருடைய பேஸ்புக்
    பக்கத்தில்...

    "இன்று ஆனந்த விகடன்
    சொல்வனம் பகுதியில்
    'ஆட்டத்தின் முடிவில்'
    என்றோர் அழகிய கவிதை,
    தேநீர்க் கோப்பை கழுவும்
    சிறுவர்களின் கழுவப்படாத
    கண்ணீர் கவிதையாகிறது.
    எழுதிய 'செளவி'க்கு
    ரூ.10,000 பரிசளித்துப்
    பாராட்டுகிறேன்.
    இளங்கவிகள் வெல்க!"
    என்று பதிவிட்டுப்
    பாராட்டியிருந்தார்.

    அன்று மதியமே
    ஆனந்த விகடன்
    அலுவலகத்துக்கு வந்த
    கவிஞர் வைரமுத்துவின்
    உதவியாளர் பாஸ்கர்,
    ஆனந்த விகடன் ஆசிரியருக்கு
    கவிஞர் எழுதிய கடிதத்தையும்
    சௌவிக்கான 10,000 ரூபாய்
    காசோலையையும் ஒப்படைத்தார்.


    {நன்றி: ஆனந்தவிகடன்}

    ReplyDelete
  2. பாராட்டுக்கள் வைரமுத்துவுக்கு.

    ReplyDelete
  3. கெங்கையா11 October 2021 at 22:07

    கவிதை அருமை.

    ReplyDelete
  4. சத்தியன்11 October 2021 at 22:07

    கவிதை அருமை.
    பாராட்டுகள்.

    ReplyDelete
  5. ஸ்ரீராம்12 October 2021 at 17:35

    இளம் வயதிலேயே
    முற்றும் துறந்த
    ஞானிகளின் பற்றற்ற நிலை.
    விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்டதல்ல;
    சமுதாயத்தால் திணிக்கப்பட்டது.

    ReplyDelete