எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 22 February 2021

படித்ததில் பிடித்தவை (“மரம் உதிர்க்கும் இலைகள்” – ஞானக்கூத்தன் கவிதை)

 


*மரம் உதிர்க்கும் இலைகள்*

 

பச்சைத் தழையுடன்

நின்றிருந்த மரத்தில்

காற்று புகுந்தது.

எண்ணி எண்ணி

துறக்கிறாற் போல

விளையாடி விழுந்தன

பழுப்பிலைகள்.

 

விழுந்த இலைகளில்

இன்னமும் பசுமை

குன்றாதவை

இருந்தது கண்டேன்.

அவ்விலைகள்

மரத்தில் மேலும்

சில நாள் இருந்திருக்கலாம்

என நினைத்தேன்.

 

விழுந்தன அவ்வகை இலைகள்

ஆனால் நான் யார் அதைக்கூற..?

 

மரமே அறியும்

இலைகளில் எவ்வெவ்

இலைகளை உதிர்க்கலாம்

அன்றைக்கென்று..!

 

*ஞானக்கூத்தன்*


4 comments:

  1. சொற்களின் அழகும்,
    அவை வந்து விழும்
    பொருத்தமான இடங்களும்
    கவிஞர் ஞானக்கூத்தனின்
    கவிதைகளில் எப்போதும்
    ரசிக்கலாம்.
    இந்தக் கவிதையிலும்
    அதற்கு பஞ்சமில்லை..!

    ReplyDelete
  2. ஸ்ரீராம்22 February 2021 at 09:47

    இறைவன் படைப்பில்
    ஆறறிவு படைத்த
    மனிதனை தவிர
    எல்லா உயிர்களும்
    தனக்கு தேவையில்லாததை
    தமது அங்கத்திலிருந்து
    அதற்குரிய காலக்கட்டத்தில்
    உதிர்க்க அறிந்திருக்கின்றன.

    ReplyDelete
  3. இளம் வயது மரணங்கள் பற்றிய அழகிய கவிதை.

    ReplyDelete