எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 19 July 2022

படித்ததில் பிடித்தவை (“வாசம்” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*வாசம்*

 

கண்கள் ஒளிர

இசையழகு கெடாமல் பாடுவாள் தங்கை

அவளிடம் பாடல் வாசம்.

 

விட்டுக்கொடுக்காதவர் அப்பா

அவரிடம் கண்டிப்பு வாசம்.

 

மழலை மாறவில்லை குட்டித்தம்பியிடம்

அவனிடம் பிஞ்சு சொற்களின் வாசம்.

 

குனிந்த தலை நிமிராமல்

நோண்டிக்கொண்டே இருக்கும் அண்ணனிடம்

செல்போன் வாசம்.

 

டீவித்தொடர்களிலிருந்து

வெளிவராத பாட்டிக்கு

கதைகளின் வாசம்.

 

வாலாட்டிக்கொண்டே

சுற்றி வருவான் அன்பு

அவனை நாயென்று சொல்லக்கூடாது

அவனுக்கு நன்றிதான் வாசம்.

 

காலநேரத்திற்கு ஏற்றார்போல்

மாறும் வாசம் வீட்டிற்குண்டு.

 

அம்மாவிற்கு

அதைத்தானே கேட்கிறீர்கள்..?

 

எப்போதும் மாறாத

சமையலறை வாசம்..!

 

 

*ராஜா சந்திரசேகர்*



9 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. நந்தகுமார்19 July 2022 at 08:24

    👌🏿

    ReplyDelete
  3. சமையலறை வாசம் - மணம் என்றும் இருப்பிடம் என்றும் இரு பொருள் தந்து நல்ல முத்தாய்ப்பு.

    ReplyDelete
  4. வெங்கட்ராமன்19 July 2022 at 09:14

    👌👌💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  5. சீனிவாசன்19 July 2022 at 09:14

    👌👌👌

    ReplyDelete
  6. செல்லதுரை19 July 2022 at 19:36

    👌👌👌👌

    ReplyDelete
  7. கெங்கையா19 July 2022 at 19:37

    அருமை.

    ReplyDelete