எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 5 January 2015

படித்ததில் பிடித்தவை (மனுஷ்யபுத்திரன் கவிதை)


கண்ணாடியில் ஒரு நீர்த்துளி
“ஜன்னல் கண்ணாடியின் வெளிப்புறம்
வழிந்தோடும் தண்ணீரில்
ஒரு துளியைப் பருகுவதற்கு
தவித்தலையும்
ஒரு குருவியின் சாகசம்
அளப்பரியது.

கண்ணாடியில் உருளும் தண்ணீர்...
எந்த அவகாசமும் தருவது இல்லை;
எந்தக் கவனக்குறைவையும் அனுமதிப்பதில்லை;
எந்த சலுகைக்கும் அங்கே இடமில்லை;
எந்த ஒரு துளியும் பிறகு திரும்பக் கிடைப்பதுமில்லை.

அந்தரத்திலிருக்கும் ஒரு பறவை
கண்ணாடியில் உருளும் ஒரு நீர்த்துளியை
துரத்தும் துயரம்
அளப்பரியது...”
                      -   மனுஷ்யபுத்திரன்.
(பசித்த பொழுது” கவிதைத் தொகுப்பிலிருந்து)

No comments:

Post a Comment