எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 6 November 2020

படித்ததில் பிடித்தவை (“ஆறிய காயங்கள்... ஆறாத வடுக்கள்...” – சுதர்சன் கவிதை)



*ஆறிய காயங்கள்... ஆறாத வடுக்கள்...


காதலியே...

நீ தந்த முத்தமும்...

அணைப்பு சுகமும்...

வெளிச்சத்தில்

மறந்திருந்தாலும்...

இருட்டுக்குத் தெரியும்

நம் அந்தரங்கம்..!

 

வாங்கித் தந்த பூக்கள்

வாடிப் போனாலும்...

வாசனைக்குத் தெரியும்

நாம் பூத்திருந்த காலம்..!

 

நனைத்துவிட்ட மழையை

கோடை மறக்கச் செய்தாலும்...

ஒதுங்கிய கோவிலின்

வாயிலுக்குத் தெரியும்

நாம் நனைந்த நாட்கள்..!

 

திரையரங்குகளில்

படங்கள் மாறியிருந்தாலும்...

நாற்காலிகளுக்குத் தெரியும்

நாம் மெய் மறந்த நேரங்கள்..!

 

அரங்கத்தில் வந்து விட்ட

நம் காதலும்...

நான் இன்றி நடந்த

உன் மணவாழ்க்கை துவக்கமும்

உன் மரணமும்...

 

நொறுங்கிப்போன என் இதயமும்

காலம் காயத்தை ஆற்றியது..!

 

ஆனால் வடுக்கள்...

 

இனி யாரிடமும் காட்டி...

பெருமைபட்டுக் கொள்ள

முடியாது என்றாலும்...

நீ கொடுத்த ஒற்றை ரோஜா...

காய்ந்து கசங்கி...

என்னிடம் பத்திரமாய்

ரகசியமாய்...

வலிக்கின்றன அதன் ரணங்கள்..!

ஊருக்குத் தெரியாதிருந்தாலும்

உள்ளுக்குள் அழுகை இருக்கும்..!

 

 *சுதர்சன்* 

No comments:

Post a Comment