எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 5 February 2016

அங்கு வந்ததும் அதே நிலா...


“அம்மாவின் அன்பு
அப்பாவின் பாசம்
நண்பர்களின் நேசம்
தாத்தா, பாட்டியின்
அக்கறை
பக்கத்துக்கு வீட்டு
பார்வதியின் பார்வை
என எல்லாவற்றையும்
இழந்து விட்டு
வெளிநாட்டுக்கு
முதல் முதலாக
பொருள் தேடி
வந்தவனுக்கு...

சற்றே ஆறுதலாக
இரவு நேரத்தில்
தனது கிராமத்தை
நினைவுப்படுத்தும்
அதே நிலவு..!”

-    K. அற்புதராஜு.

No comments:

Post a Comment