எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 24 February 2016

ரசனை


நகரத்தை அடுத்து
கிராமத்துக்குள்
நுழைந்தது ரயில்...

கான்கிரீட் உலகத்தை
உதறிவிட்டு
கரிசல் பூமிக்குள் நான்.

பச்சை வயல்களில்
நெல் பயிர்களை
காற்று தாலாட்டியது.

அழகான குளம்
சிறுவர்களை
குளிப்பாட்டிக்
கொண்டிருந்தது.

ஆடு, மாடுகள்
தோலுரித்து
கொக்கியில்
தொங்கவில்லை...
புல்வெளியில்
சுதந்திரமாக
அமர்ந்து
அசைப்போட்டுக்
கொண்டிருந்தன.

பச்சை விளக்குக்காக
ரயில் காத்திருக்கையில்
மரக்கிளைகளில்
குருவிகளும்
பறவைகளும்
இளையராஜாவாக
இசைத்துக்கொண்டிருந்தன.

எங்கள் பெட்டியில்
உட்கார்ந்திருந்த
எட்டுப்பேரில்
ஒருவர் தூங்கிக்
கொண்டிருந்தார்.
ஆறுப்பேர்
கைப்பேசியில்
மூழ்கி இருந்தனர்.
நானும் ரயிலும்
ரசித்துக்கொண்டிருந்தோம்..!”

-   K. அற்புதராஜு.

No comments:

Post a Comment