எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 12 February 2016

போதை...


“பத்தாவது படிக்கும்போது
சொந்தக்கார சீனியர் மாணவர்
யாருக்கும் தெரியாமல்
தனிமையில் புகைப்பிடிப்பதை
பார்த்துவிட்டேன்.
நான் பார்த்ததை
அவர் பார்த்து
கொஞ்சம் வேர்த்து
என்னையும்
கட்டாயப்படுத்தி
இருமிக்கொண்டே
அங்கிருந்து ஓடிவிட்டேன்.
ஏனோ தெரியவில்லை
அப்போதிலிருந்தே
புகை எனக்கு பகையானது.

படிப்பை முடித்து
வேலைக்கு வந்தவுடன்
எப்போதாவது நடக்கும்
நண்பர்களின் ட்ரீட்
பீரில் தொடங்கி
மதுவில் முடியும்.
அதிலும் மூழ்காமல்
கரையேறிவிட்டேன்.

அதற்கு பிறகு
விஞ்ஞான வளர்ச்சியில்
என்னை போதைக்குள்
தள்ளியது
தொலைக்காட்சியும்,
கணினியும்,
கைப்பேசியும்தான்...

ஏனோ இன்னும்
கரையேறவே முடியவில்லை
முகநூலிலிருந்தும்,
வாட்ஸ் ஆப்-பிலிருந்தும்..!”

-   K. அற்புதராஜு.

No comments:

Post a Comment