எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 10 June 2015

ஒரு இலையின் இறுதிப்பயணம்...


“மரத்தில் தாவி தாவி
செல்லும் அணில்...

அணில் கால் பட்டு
கிளையிலிருந்து
விடுபட்டது பழுத்த இலை...

பழுத்த இலை மெல்ல
காற்றில் மிதந்து மிதந்து
தனது இறுதி பயணத்தின்
முடிவில் தொட்டது மண்ணை...

மண்ணில் விழும் இலையை
பாவ உணர்ச்சியோடு
நானும்...
குற்ற உணர்ச்சியோடு
அணிலும்...
பார்த்துக்கொண்டிருந்தோம்..!”

           -  K. அற்புதராஜு.

4 comments:

 1. மெல்லிய உணர்வலை எழுப்பும் வரிகள் தோழர்!
  தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளைப் படிக்கும் வாய்ப்பு தரும் உங்களுக்கு நன்றிகள் பல்!

  ReplyDelete
 2. உங்களுடைய கவிதைகளை படித்து, பிடித்து, பதிவிட்டுருக்கிறேன். நன்றி.

  ReplyDelete
 3. very nice words last para is heart touching

  ReplyDelete