எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 27 September 2020

படித்ததில் பிடித்தவை (“கற்பாவை” – உமா மகேஸ்வரி கவிதை)

 


*கற்பாவை*

 

சமையலறையிலிருந்து

பார்த்துக் கொண்டிருந்தேன்

 

சுவரோடு பந்து விளையாடுகிறவனை

 

பந்தை எறிய எறிய

திருப்பியடித்தது சுவர்

 

உற்சாகமாக

ஒரேயொரு முறையாவது

பந்து வீச

சுவருக்கும் வாய்ப்புத் தந்திருந்தால்

இப்படி மூர்க்கமாய் உடைத்திருக்காது..!

 

*உமா மகேஸ்வரி*


3 comments:

  1. கணவன் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ள வேண்டும். தனக்கான கருத்தை திருப்பி சொல்லி விடக் கூடாது. குடும்பத்தில் பெண் தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போக வேண்டும். இது தான் இன்றும் இந்திய குடும்ப சூழலில் பெண்களின் நிலையாக பெரும்பாலும் இருக்கிறது. எப்போது தனக்கான வாய்ப்பு வரும் என்று மனதிற்குள் புளுங்கிக் கொண்டிருக்கும் பெண்களின் மனநிலையை கவிஞர் உமாமகேஸ்வரியின் இந்தக் கவிதை மிகச் சிறப்பாய் எடுத்துரைக்கிறது தோழமைகளே.

    - திரு. சக்கையா.
    (மின் இலக்கியப் பூங்கா – புலனம் பதிவு)

    ReplyDelete
  2. உட்கருத்தை புரிந்து கொள்ள சிறிது நேரம் பிடித்தது. அனைத்தும் மாற்றத்திற்கு உட்பட்டது. அருமை.

    ReplyDelete
  3. உட்கருத்தை புரிந்து கொள்ள சிறிது நேரம் பிடித்தது. அனைத்தும் மாற்றத்திற்கு உட்பட்டது. அருமை.

    ReplyDelete