எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 8 January 2017

படித்ததில் பிடித்தவை (“சௌக்கார்ப்பேட்டை பிரவீன்லால் சேட்” – யுகபாரதி கவிதை)


சௌக்கார்ப்பேட்டை பிரவீன்லால் சேட்
ஒரு வீட்டில் வாடகைக்கு குடி அமர்ந்தார்.
சில மாதம் கழித்து
அந்த வீட்டு உரிமையாளர் பிரவீன்லாலுக்கு
வாடகை செலுத்தினார்.

சௌக்கார்ப்பேட்டை பிரவீன்லால்
ஒரு ஹோட்டலுக்கு உணவருந்தப் போனார்.
சில வாரம் கழித்து
அந்த ஹோட்டல் உரிமையாளர் பிரவீன்லாலிடம்
இரண்டு ரவாதோசைக்கு உரிய பணத்தைக்
கொடுக்கலானார்.

சௌக்கார்ப்பேட்டை பிரவீன்லால்
ஒரு மார்வாடிப் பெண்ணைத் திருமணம் செய்து தன்
காலையும் கையையும் அமுக்கிவிடச் செய்தார்.
சில ஆண்டு கழித்து
அந்த மார்வாடிப் பெண்ணின்
காலையும் கையையும் அமுக்கிக்கொண்டிருந்தார்.

-         யுகபாரதி.

No comments:

Post a Comment