எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 5 December 2015

நானும் ரெளடிதான்...


“சென்னை நகரத்தில்
முன்பிருந்த
ஆறு, ஏரி, குளம் போன்ற  
நீர் நிலைகளை
அடையாளம் காட்டி சென்ற
வெள்ள நீர்...

சி.எம்.டி.ஏ. அனுமதி வாங்கி
ஏரிக்குள் கட்டிய அந்த
பிரமாண்ட வீட்டின்
உள்ளே நுழைந்து
கார், பைக்கை
மூழ்கடித்தப் பின் 
கொஞ்சம் கொஞ்சமாக
உயர்ந்தது அந்த இரவில்...

வெள்ளம் வரலாம்
என்று உஷாராக
மேல் மாடி அறையில்
உறங்கிக்கொண்டிருந்தனர்
வீட்டுக்காரர்கள்.

கீழே வரவேற்பரையில்
உயரமான மேஜையில்
வைக்கப்பட்ட அந்த
பிரமாண்டமான
மீன் தொட்டிக்குள்
நுழைந்து அழகான மீன்களை
தன்னுடன் அழைத்து கொண்டு
கொஞ்சம் கொஞ்சமாக
வடியத் தொடங்கியது
வெள்ளம்..!”

-   K. அற்புதராஜு.

No comments:

Post a Comment