எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 9 December 2015

செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி


“அலுவலகம் முடிந்து
வீடு திரும்பியதும்
நான் மனைவியிடம்
கூறும் அன்றைய
நிகழ்வுகளையும்...

மகன் கல்லூரி முடிந்து
வீட்டுக்கு வந்து
சமையல் அறையில்
அம்மாவிடம் கூறும்
அத்தனை விஷயங்களையும்...

வீட்டுத்துணி துவைக்க
வரும் பவானி,
பாத்திரம் துலக்க
வரும் சாய்னா,
எதிர் வீட்டு சத்தியா
என ஒவ்வொருவர்
கூறும் செய்திகளையும்...

கொஞ்சம் கூட்டி, குறைத்து,
செம்மையாக்கி,
மெருகேற்றி, அழகாக்கி...

அன்று இரவோ
அடுத்த நாளோ
அம்மா வீட்டுக்கோ
அக்கா வீட்டுக்கோ
கைப்பேசியில்
பேசும் போது
செய்திகளாக
வாசித்து விடுகிறார்
எங்க வீட்டு
சரோஜ் நாராயணசாமி..!

-   K. அற்புதராஜு.

4 comments:

 1. From Rajendran
  baaraj@yahoo.co.in
  To arputharaju_k@yahoo.co.in Dec 13 at 11:41 PM
  அன்புள்ள திரு ராஜு,

  உங்கள் சமீபத்திய இரு கவிதைகளையும் வாசித்து மகிழ்ந்தேன்.
  “செயதிகள் வாசிப்பது.....” தலைப்பிட்ட கவிதையை படித்தபோது அதை சற்று மாற்றி கீழ்கண்டவாறு அமைத்தால் இன்னும் ‘நச்’ என்று இருக்கும் என்று தோன்றியது.  “அலுவலகம் முடிந்து
  வீடு திரும்பியதும்
  நான் மனைவியிடம்
  கூறும் அன்றைய
  நிகழ்வுகளையும்...

  மகன் கல்லூரி முடிந்து
  வீட்டுக்கு வந்து
  சமையல் அறையில்
  அம்மாவிடம் கூறும்
  அத்தனை விஷயங்களையும்...

  வீட்டுத்துணி துவைக்க
  வரும் பவானி,
  பாத்திரம் துலக்க
  வரும் சாய்னா,
  எதிர் வீட்டு சத்தியா
  என ஒவ்வொருவர்
  கூறும் செய்திகளையும்...

  கொஞ்சம் கூட்டி, குறைத்து,
  செம்மையாக்கி,
  மெருகேற்றி, அழகாக்கி
  செய்திகளாக
  வாசித்து விடுகிறார்
  எங்க வீட்டு
  சரோஜ் நாராயணசாமி..

  அன்று இரவோ
  அடுத்த நாளோ
  அம்மா வீட்டுக்கோ
  அக்கா வீட்டுக்கோ
  கைப்பேசியில்
  பேசும் போது....!
  ‘நிகழ்வுகளையும்’......, ‘விஷயங்களையும்’..... தொடர்ந்து, ‘செய்திகளையும்...’ என்பது ‘செய்திகளும்....’ என்பதைவிட பொருத்தமாக இருக்கும்?


  “நாங்கள் கூறிய / அத்தனை செய்திகளையும்” என்பது

  “என ஒவ்வொருவர் / கூறும் “செய்திகளும்”

  என்பதை திரும்பச் சொல்வது அல்லவா.


  ‘நிகழ்வுகளையும்’......, ‘விஷயங்களையும்’..... ‘செய்திகளையும்...’ மூன்றையும் தொகுத்து “செய்திகளும்” என மூன்றில் ஒன்றை மட்டும் சுட்டுவதை தவிர்க்கலாம்.


  “செய்திகளாக வாசித்து விடுகிறார் எங்க வீட்டு சரோஜ் நாராயணசாமி..”

  என்பதை வரிகளாக வெட்டும்போது சிறிது மாற்றம் செய்து பார்த்தேன்.

  அன்புடன்

  ராஜேந்திரன்

  ReplyDelete
 2. From
  arputharaju_K@yahoo.co.in

  To
  baaraj@yahoo.co.in

  வணக்கம்...
  தங்களது கருத்துக்கு நன்றி...
  தாங்கள் கூறியப்படியே கவிதையை மாற்றம் செய்துள்ளேன் ஒரு சிறிய மாறுதலுடன்...
  இப்போது இன்னும் அழகாகி விடுகிறது கவிதை...
  நிறைய விமர்சிக்கவும்...

  தங்கள் அன்புள்ள...
  K. அற்புதராஜு.

  ReplyDelete
 3. From
  baaraj@yahoo.co.in

  To
  Arputharaju. K Dec 14 at 4:39 PM

  ஆம். இப்போது இன்னும் அழகாக இருக்கிறது கவிதை.
  நான் சற்று தயக்கத்தோடே எழுதினேன்.
  கவிதையைப் பற்றி சிறப்பு அறிவு இன்றி விமர்சிப்பது சரியா என்று...
  நன்றி.

  ராஜேந்திரன்

  Sent from Mail for Windows 10

  ReplyDelete
 4. From
  Arputharaju. K

  To
  baaraj@yahoo.co.in

  15.12.2015 at 6:16 AM

  வணக்கம்.

  உங்களுடைய விமர்சனம் கவிதையை மேலும் அழகுப்படுத்தி விட்டது.

  நன்றி..!

  - K. அற்புதராஜு.

  ReplyDelete